பதவி உறுதிமொழியை மீறியதாக பிரதமர் மற்றும் துணைப்பிரதமர்மீது வழக்கு

courtநம்பிக்கை  மோசடி   செய்தார்கள்   என்று  கூறி   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்  மீதும்  துணைப்  பிரதமர்   அஹமட்   ஜாஹிட்   ஹமிடிமீதும்   கைருடின்   அபு  ஹசான்  வழக்கு  தொடுத்துள்ளார்.

அவ்விருவரும்   நஜிப்பின்  சொந்த  வங்கிக்  கணக்கில்   இருந்த   யுஎஸ்$681 மில்லியன்  குறித்து   மக்களிடம்   தவறான   செய்திகளைக்  கூறி  வந்ததாக   அம்னோ  முன்னாள்   உறுப்பினர்   கைருடின்   குற்றம்   சாட்டினார்.

அப்படிச்  செய்ததன்வழி   அவ்விருவரும்   அவர்கள்   எடுத்துக்கொண்ட   பதவி  உறுதிமொழியை  மீறி  விட்டனர்.

அவர்கள்  பதவி  உறுதிமொழியை  மீறி   விட்டதாகவும்   அதன்  காரணமாக   பதவியில்  இருக்க  தகுதியற்றவர்கள்   என்றும்  நீதிமன்றம்   அறிவிக்கக்  கோரி   கைருடின்  மனுச்  செய்து  கொண்டுள்ளார்.

நஜிப்பின்   வங்கிக்  கணக்கில்   இருந்த   ரிம2.6 பில்லியன்,  சவூதி  அரச  குடும்பத்தைச்  சேர்ந்த   ஒருவர்   அளித்த    நன்கொடை   என்று  கூறப்பட்டது. அதைச்   சட்டத்துறைத்   தலைவர்   முகம்மட்  அபாண்டி  அலியும்   உறுதிப்படுத்தினார்.

ஆனால்,  நஜிப்பின்  அரசியல்   எதிரிகள்   அதை  ஏற்கவில்லை.  அது  1எம்டிபி  பணம்   என்கிறார்கள்.