ஸாகிட்: சமயப்பள்ளிகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்

 

schoolsmustfollowsafetystandardsநாடுதழுவிய அளவில் அனைத்து மாணவர்கள் தங்கிப்படிக்கும் சமயப் பள்ளிகள் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.

இன்று, கோலாலம்பூர், டத்தோ கெராமாட்டிலுள்ள தாபிஸ் டாருல் கொரான் இட்டிஃபாஹ்யாவுக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸாகிட் இவ்வாறு கூறினார்.

இப்பள்ளியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீயில் 23 பேர் மாண்டதாக கூறப்படுகிறது.

கட்டடங்களின் பாதுகாப்புக்கான விதிகள் ஊராட்சிமன்றங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகாவால் வரையப்பட்டவை என்றும் அவை மிகத் தெளிவானவை என்றும் அவர் கூறினார்.

“2011 ஆம் ஆண்டிலிருந்து, இது போன்ற 31 சம்பவங்கள் நடந்துள்ளன. தாபிஸ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்காக அனைத்து தரப்பினரும் பாதுகாப்பு தரங்களைப் பின்பற்றியாக வேண்டும்.

“மாநில அரசுகளின் விவகாரங்களில் பெடரல் அரசாங்கம் தலையிட விரும்பவில்லை…பாதுகாப்பு தர விதிகள் பின்பற்றப்படுவதை நாங்கள் விரும்புகிறோம்”, என்று ஸாகிட் இன்று கூறினார்.