200 ஆண்டு வரலாற்றை கண்முன் நிறுத்துகிறது ‘காலனித்துவப் படுகுழியில் சஞ்சிக் கூலிகள்’-நாவல்

 

naa.aa.se.1 ‘ஞாயிறு’ நக்கீரன், செப்டெம்பர் 23, 2017.    புத்ராஜெயா, செப்டம்பர் 21: பாரம்பரிய பெருமைமிக்க இந்த மண்ணுக்கும் தமிழ்ப்பெருங்குடிக்கும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வரலாற்றில் இடையில் தொய்வு ஏற்பட்டாலும், அதற்குப் பின்னர் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட புது வரலாற்றை, இரத்தம் சிந்தி வியர்வையில் புரண்டு முன்னோர் கண்ட அந்த துயரப் பயணத்தை அப்பட்டமாக படம் பிடிக்கிறது  ‘பன்முகச் செல்வர்’ நா.ஆ.செங்குட்டுவன் சமைத்த காலனித்துவப் படுகுழியில் சஞ்சிக் கூலிகள் என்னும் புதினம் என்று இந்த நூல் அண்மையில் புத்ராஜெயாவில் அறிமுகம் கண்டபோது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அளவான கதை மாந்தர்களை மட்டும் கொண்டு, தமிழகத்தில் இருந்து நாகப் பட்டினம் துறைமுகம் வழியாக மேற்கொண்ட கப்பல் பயணம், ஆங்கிலேயர்-களின் முகவர்களாலும் கங்காணிகளாலும் பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு அழைத்துபரப்பட்ட பாட்டாளிவர்க்கத்தினர் இந்த மண்ணில் பட்ட அவலம், இழைக்கப்பட்ட வஞ்சகமெல்லாம் மிகைப்படாமலும் குறைப்படாமலும் ஏடுகளில் பதிக்கப்பட்டுள்ள பாங்கு செங்குட்டுவனுக்கே கைவந்த இலக்கியக் கலை ஆகும்.

நம் முன்னோர்களின் அடிச்சுவட்டை ஏட்டுச் சுவடிகளில் பதிக்கப்பட்டஅரிய நூல் naa.aa.se.4காலனித்துவப் படுகுழியில் சஞ்சிக் கூலிகள் என்னும் நாவல் என்று இந்த நாவல் அறிமுக நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் குறிப்பிட்டார். கடந்த ஜூலைத் திங்களில் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டு ஆதரவில் இந்திய கலாச்சார மைய நேதாஜி அரங்கில் வெளியீடு கண்ட இந்த நூல், அண்மையில் புத்ரா ஜெயா இந்திய அரசப் பணியாளர் கூட்டு அமைப்பான ‘இமையம்’ ஏற்பாட்டிலும் ‘செடிக்’ ஆதரவிலும் அறிமுகம் கண்ட வேளையில், தமிழ்ச் சமூகத்தில் இலக்கியம் படைக்கும் தமிழ்வாணர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டவும் சீராட்டவும் வேண்டும் என்பதற்கு அடையாளமாக இந்த இலக்கிய நிகழ்ச்சி அமைந்துள்ளது என்று என்.எஸ். இராஜேந்திரன் குறிப்பிட்டார்.

இமையம் அமைப்பின் தலைவர் அ. சுப்பிரமணியனின் வரவேற்புடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தேசிய தகவல் இலாக்கா துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் கந்தசாமி நூல் ஆய்வை வழங்கினார். படிப்பவர் யாராயினும் எளிதில்  புரிந்து கொள்ளவும் மனதில் பதிய வைக்கவும் ஏதுவாக எளிய நடையில் இந்தப் புதினம் படைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, படிப்பவரின் நெஞ்சத்தை காலனி ஆட்சிக் காலத்திற்கு அழைத்துச் செல்லும் விதமாக இந்த நாவலில் பாத்திரப் படைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்று பாலகிருஷ்ணன்  பாராட்டினார்.

‘பன்முகத் தமிழ்ச் செம்மல்’ நா.ஆ. செங்குட்டுவனின் காலனித்துவ படுகுழியில் சஞ்சிக்கூலிகள் என்னும் நெடுங்கதை நூல், பலரின் மனதில் அந்நாளைய தோட்டப்புற வாழ்வு குறித்த எண்ண அலையைத் தூண்டும் என்பது திண்ணம்  என்றும் அன்றைய தோட்டப்புற சூழலை கதைப் பாத்திரங்களின்வழி இன்றையத் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பாலா தன்னுடைய ஆய்வுரையில் குறிப்பிட்டார்.

naa.aa.se.3 புத்ரா ஜெயா, பிரிசிண்ட் 8, செர்பகுணா அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இமையம் அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சு.மா.செல்வராஜு, டத்தோ வி.எல் காந்தன், இமையத்தின் செயலவையினர், உறுப்பினர்கள்,  தமிழ் ஆர்வலர்கள் என ஏராளமானோருடன் நூலாசிரியரும் கலந்து கொண்டார்.