தமிழனின் அரசியல் சுவடுகள் வெறும் சுவரானது!

periyar-anna-karunanithy60001முதலில் பிராமணர் அல்லாதோருக்கான ஆட்சி என்பதல்ல. பிரிட்டீஷ் அரசாங்கத்தில் அதிகாரம் பெறுவது என்பது தான்.
அன்றைய காலகட்டத்தில் பிரிட்டீஷார் அரசில் பெரும்பாலும் அதிகார மட்டத்தில் இருந்தவர்கள் கல்வி கற்ற பிராமணர்களே.
ஜமீன்தார்கள் , மிட்டாமிராசுகள் , பெரும் நிலவுடைமையாளர்கள் போன்றவர்களிடம் வரி வசூல் செய்யும் பொறுப்பு பிராமண அதிகாரிகளிடமே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த புகைச்சல் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்துள்ளது.

அவ்வாறு பிராமணர்களின் அதிகாரத்தை ஒடுக்கும் நோக்கில் டி.எம் .நாயர் , தியாகராய செட்டி போன்ற செல்வந்தர்களால் பிராமணர் அல்லாதோருக்கான நீதிகட்சி தொடங்கப்பட்டது. நீதிகட்சியில் அங்கம் வகித்தவர்களின் பெயர்களையும் பின்புலத்தையும் பார்த்தாலே தெரியும் அது சாமானியர்களுக்கானது அல்ல என்று. நீதிகட்சி தொடங்கப்பட்டு சுமார் 16 ஆண்டுகள் கழித்தே ஈவேரா அதில் இணைந்தார். அது வரை அவர் காங்கிரஸில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார். ( காங்கிரஸில் இருந்து அவர் வெளியேறவும் அங்கிருந்த பிராமண ஆதிக்கமே காரணம் என முன்மொழிந்துள்ளார். பிராமண வெறுப்பை கக்குவதற்கு நீதிகட்சி அவருக்கு சரியான புகழிடமாக இருந்தது.)

[ மொண்டேகு கெம்ஸ்ஃபோர்ட் அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றப்பட்டு, சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின் கீழ் 1920ம் ஆண்டு முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றது. 1920–37 காலகட்டத்தில் இரட்டை ஆட்சி முறையில் ஆட்சி புரிந்த ஐந்து அரசுகளில் நான்கு நீதிக்கட்சி அரசுகளே. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி தேசியவாத இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அரசியல் மாற்றாகச் செயல்பட்டது. 13 ஆண்டுகள் பதவியில் இருந்த நீதிக்கட்சி 1937 தேர்தலில் காங்கிரசிடம் தோல்வியடைந்தது. இத்தோல்வியிலிருந்து அதனால் மீளமுடியவில்லை. 1938 இல் பெரியார் ஈ. வே. ராமசாமி நீதிக்கட்சியின் தலைவரானார். 1944ல் கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய ஈ. வே. ராமசாமி, கட்சி தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தினார். ஆனால் இம்மாற்றத்தை ஏற்காத ஒரு குழுவினர் “நீதிக்கட்சி” என்ற பெயரில் போட்டிக் கட்சி ஒன்றைத் தொடங்கி 1952 தேர்தலில் போட்டியிட்டனர். அதன் பின்னால் அப்பிரிவு மெதுவாகச் செயலிழந்து விட்டது.]

சுருக்கமாக சொன்னால்
வடுகர் vs பிராமணர்
என்ற அதிகார போட்டியை
தமிழர் vs பிராமணர்
என மடைமாற்றி இன்றுவரை
தமிழர் என்ற போர்வையில்
திராவிட வடுக நாதாரி கூட்டங்கள் எல்லா பழியையும்
பிராமணர்கள் மீது மட்டுமே சுமத்தி சாமர்த்தியமாக நம் தலையில் அமர்ந்து அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.

உலகத்தை ஆண்ட தமிழன் பேசியே செத்தான்

-பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா