என் பூர்விகம் கேரளா அல்ல, ஆனாலும் நானே இந்தியர்களின் மேம்பாட்டுத் தந்தை -நஜிப்

najibஇப்போதெல்லாம்  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கால்   முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைக்  கிண்டல்  செய்யாமல்   இருக்க  முடியவில்லை.  மகாதிரும்  அப்படியே.  வாய்ப்புக்   கிடைக்கும்போதெல்லாம்   நஜிப்பை   இடித்துரைக்கிறார்.

இன்று   கோலாலும்பூர்   புத்ரா   உலக   வாணிக   மையத்தில்    மஇகா   தேசியப்  பேராளர்   கூட்டத்தில்  தலைமையுரையாற்றிய    நஜிப்    இந்தியர்களுக்கு   நிறைய   செய்திருப்பதாக   நஜிப்     கூறினார்.

அப்துல்லா   அஹமட்   படாவி   பிரதமராக    இருந்த   காலத்திலேயே   இந்தியர்   விவகாரங்களைக்  கவனிப்பதற்கென்று   தாம்   அமைச்சரவைக்  குழு  ஒன்றை   அமைத்ததாக    அவர்   சொன்னார்.

“அரசாங்கத்   தலையீடும்    அவர்களை   உயர்த்த   வேண்டும்   என்ற  அரசியல்  நோக்கமும்   இல்லையென்றால்   இந்தியர்கள்   புறக்கணிக்கப்படுவார்கள்,  ஓரங்கட்டப்படுவார்கள்,  பின்தங்கி  விடுவார்கள்   என்பதால்      இந்தியர்களின்  நிலையை   உயர்த்துவதற்காகத்தான்  அதைச்   செய்தேன்.

“என்  தந்தையோ  தாத்தாவோ  கேரளாவிலிருந்து  வந்தவர்கள்  அல்ல   என்றாலும்கூட ,  நான்தான்   இந்திய  சமூகத்தின்   மேம்பாட்டுத்   தந்தை   என  அழைக்கப்படுகிறேன்”,   என்றாரவர்.

நஜிப்,  மகாதிரின்   பெயரைக்   குறிப்பிடவில்லை    என்றாலும்   பின்னவரின்  மூதாதையர்   கேரளாவைச்   சேர்ந்தவர்கள்   என்பது  பலரும்   அறிந்ததுதான்.