குர்திஸ்தான் தனிநாடாவதற்கான வாக்கெடுப்பு- ஈராக் கடும் எதிர்ப்பால் போர் பதற்றம்!

Kurdistan-Flag-and-Mapஏர்பில்: குர்திஸ்தான் தனிநாடாவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு ஈராக் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஈராக் மற்றும் துருக்கி எல்லை பகுதிகளில் குர்து இன மக்கள் நீண்டகாலமாக தனி நாடு கோரி போராடி வருகின்றனர். குர்து தேசிய இனம் தனித்துவமானது; தம்மைத் தாமே ஆளக் கூடிய சுயநிர்ணய உரிமை குர்து மக்களுக்கு இருக்கிறது என ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஒசாலன் முன்னெடுத்தார்.

பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈராக்கின் வடபகுதியில் சுயாட்சி கொண்ட பிராந்தியதாக குர்திஸ்தான் உருவெடுத்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக், சிரியாவை ஆக்கிரமித்த போது அவர்களுக்கு எதிரான உக்கிர போரை நடத்தியது குர்திஸ்தான் பிராந்திய ராணுவம்தான்.

தற்போது ஐஎஸ் தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட நிலையில் குர்திஸ்தான் தனி நாடாக உருவெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. குர்திஸ்தான் பிராந்தியத்தில் 2,065 வாக்குச் சாவடிகளில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

ஆனால் இந்த வாக்கெடுப்புக்கு ஈராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் குர்து தேசிய இனமக்களின் உணர்வை வெளிப்படுத்த இதுவே தருணம் என குர்து தேசிய இனத்தின் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனால் குர்திஸ்தான் பிராந்தியத்தில் பதற்றமான சூழல்நிலவி வருகிறது.

tamil.oneindia.com