ஜோகூர் தாலிபான் மாநிலம் அல்ல: சுல்தான் காட்டம்

johorஜோகூரில்  முஸ்லிம்களுக்கு- மட்டும்  என்ற  கொள்கையுடன்  செயல்படும்   சலவை  நிலையம்    அதன்  கொள்கையை  மாற்றிக்கொள்ள  வேண்டும்  என   ஜோகூர்  ஆட்சியாளர்   சுல்தான்   இப்ராகிம்  சுல்தான்  இஸ்கண்டர்  பணித்துள்ளார்.

“இந்த  அபத்தத்தை   என்னால்   ஏற்றுக்கொள்ள  முடியாது.  இது   ஜோகூர்.
பங்சா  ஜோகூருக்கு  உரியது,  எல்லா  இனத்தவருக்கும்   சமயத்தவருக்கும்  சொந்தமானது,      முற்போக்கான,  நவீனமான,  மிதவாதமான   மாநிலம்.

“இது  ஒன்றும்  தாலிபான்  மாநிலம்   அல்ல.   இச்செயலில்    தீவிரவாதம்   தொனிக்கிறது.  ஜோகூரில்  இஸ்லாத்துக்குத்  தலைவர்  என்ற   முறையில்   கூறுகிறேன்,  இது  முற்றிலும்  ஏற்றுக்கொள்ள   முடியாத   செயல்”,  என   கோகூர்   ஆட்சியாளர்   கூறியதாக   த  ஸ்டார்   தெரிவித்தது.

இவ்விவகாரத்தை   விசாரிக்குமாறு   மாநில  இஸ்லாமிய   சமய  விவகாரக்  குழு,   சமய  மன்றம்,  மாவட்ட   மன்றம்   ஆகியவற்றுக்கு   சுல்தான்   உத்தரவிட்டுள்ளார்.