பிஎன் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதி எம் ஏசிசியிடம் ஒப்படைப்பு

பாரிசான்  நேசனல்   14வது  பொதுத்  தேர்தலுக்கான   அதன்  வேட்பாளர்   பட்டியலின்  ஒரு   பகுதியை   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையத்திடம்  ஒப்படைத்திருப்பதாக    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்  கூறினார்.

மற்ற  வேட்பாளர்களை  முடிவு   செய்த  பின்னர்    அவர்களின்  பட்டியலும்   ஆணையத்திடம்   ஒப்படைக்கப்படும்.

“மற்ற   வேட்பாளர்களின்  பெயர்களும்   கையில்   உள்ளன.   ஆனால்   அவர்கள்  இன்னும்   உறுதி  செய்யப்படவில்லை”,  என்று   நஜிப்   நேற்றிரவு   அம்னோ   உச்சமன்றக்  கூட்டத்துக்குப்   பின்னர்    செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.

வேட்பாளர்கள்  ஏற்புடையவர்கள்தானா   என்பதைக்  கண்டறிவதற்காக    அவர்களின்  பெயர்கள்   எம்ஏசிசி-இடம்   ஒப்படைக்கப்படுகின்றன   என்று   கூறிய    நஜிப்,    அவ்வாறு   செய்துள்ள   ஒரே  கட்சி   பிஎன்  மட்டுமே   என்றும்  சொன்னார்.