ஜெர்மன் எப்&பி நிகழ்ச்சி, போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்கிறது

 

கிள்ளானில் ஜெர்மன் உணவு மற்றும் மதுபான விழாவிற்கு போலீஸ் அனுமதி கொடுக்கப் போவதில்லை என்று கூறுகிறது. மேலும், அவ்விழாவிற்கு அனுமதி கொடுத்ததாக கூறப்படுவதையும் போலீஸ் மறுத்துள்ளது.

துணைப் பிரதமர் அஹ்மட் ஸாகிட் ஹமிடியின் உத்தரவுப்படி போலீஸ் அனுமதி கொடுக்காது என்று கிள்ளான் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் மஸலான் பைஜின் கூறினார்.

மேலும், போலீஸ் ஜெர்மன் விழா ஏற்பாட்டாளர்களிடமிருந்து எந்த மனுவையும் இதுவரையில் பெறவில்லை. போலீஸ் அனுமதி கொடுத்துள்ளது என்று கூறும் கடிதம் போலீயானதாக இருக்க வேண்டும் என்றாரவர்.

நேற்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம், விழா ஏற்பாட்டாளர்கள் கிள்ளான் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைமையகத்திலிருந்து விழா நடத்துவதற்கு ஆட்சேபம் இல்லை என்றும், ஆனால் அந்த விழா சில நிபந்தனைகளுக்கு உப்பட்டிருக்க வேண்டும், அதில் ஒன்று, இந்த விழா முஸ்லிம்-அல்லாதவர்களுக்கு மட்டுமே என்றும் கூறப்பட்டிருந்த கடிதத்தைப் பெற்றதாகவும் கூறியிருந்தார்.

அக்டோபர் 12 மற்றும் 13 இல் நடத்தப்படவிருக்கும் அந்த விழாவிற்கு சிலாங்கூர் பாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மலேசியாகினி தெங்கின் கருத்திற்காக காத்திருக்கிறது.