லியோ: பினாங்கு டிஏபி-இடம் உருப்படியான மேம்பாட்டுத் திட்டம் கிடையாது

டிஏபியால்    வழிநடத்தப்படும்  பினாங்கு   அரசு   அம்மாநில  மக்களின்  மேம்பாட்டுக்குப்  பயனுள்ள  திட்டங்களைக்   கொண்டிருக்கவில்லை.

இவ்வாறு   குற்றஞ்சாட்டிய  மசீச    தலைவர்   லியோ  தியோங்  லாய்,   கடந்த   ஒன்பதாண்டுகளாக    லிம்  குவான்    எங்கை   முதலமைச்சராகக்  கொண்டுள்ள  பினாங்கு   அரசு   அம்மாநிலத்தின்   பல  பிரச்னைகளுக்குத்    தீர்வு  காணவும்   தவறிவிட்டது  என்றார்.

“ஒன்பதாண்டுகளாக   பினாங்கை    நிர்வகித்துவரும்   அவர்,  தம்மால்  தீர்வுகாண  முடியாத   விவகாரங்களுக்கெல்லாம்  முந்தைய   அரசுதான்   காரணம்   என்று  அதன்மீது  பழி  போட   முயல்வதைத்தான்  பார்க்கிறோம்”,  என  நேற்றிரவு   ஜார்ஜ்டவுனில்  மசீச   மாநாட்டைத்   தொடக்கி  வைத்த  பின்னர்  லியோ   செய்தியாளர்களிடம்    கூறினார்.