பத்திரிகை விற்பனை குறைந்ததால் என்எஸ்டிபி சாபா, சரவாக்கில் பத்திரிகை வெளியீட்டை நிறுத்தியது

நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  பிரஸ் (என்எஸ்டிபி)   வெளியிடும்  நாளேடுகள்   இனி,  சாபா,  சரவாக்கில்   கிடைக்க  மாட்டா.

கிழக்கு    மலேசிய     வாசகர்கள்   இனி   அந்நாளேடுகளை  இணைய   வடிவில்   மட்டுமே   வாசிக்க   முடியும்.

ஆன்லைன்  நாளேடுகளில்   வாசகர்களுக்குச்  செய்திகள்   விரைவில்   கிடைக்கும்   வாய்ப்பு   உள்ளது   என   பெரித்தா   ஹரியான்   கூறியது.

பத்திரிகை   விற்பனையைக்   கணக்கிடும்   ஏபிசி   அமைப்பு,   எல்லா  மொழி  பத்திரிகைகளின்   விற்பனையுமே   குறைந்திருப்பாதாகக்  கூறுகிறது.  சில  62.2 விழுக்காடு   அளவுக்குக்கூட   குறைந்துள்ளன.

2012-இலிருந்து  2016வரை   ஹரியான்  மெட்ரோ   விற்பனை  379,169 -இலிருந்து   142,262 ஆக,  அதாவது  62.5 விழுக்காடு  குறைந்துள்ளது.

நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்   விற்பனை  93,321-இலிருந்து  54,490 ஆக   41.6 விழுக்காடு  குறைந்தது.

பெரித்தா  ஹரியான்,   உத்துசான்   மலேசியா   ஆகியவற்றின்  விற்பனை   30  விழுக்காடு    குறைந்தது.