ஷாரிர் அரசியலிலிருந்து ஓய்வுபெற மாட்டார்; ஜோகூரில் எதிரணிப் பெரும்புள்ளிகளைச் சந்திக்க ஆயத்தமாக உள்ளார்

ஷாரிர்  அப்துல்  சமட்   14வது   பொதுத்  தேர்தலில்   தம்முடைய   ஜோகூர்   பாரு   நாடாளுமன்றத்    தொகுதியைத்    தக்கவைத்துக்கொள்ளத்    தயாராகி   விட்டார்.  தமக்கு  எதிராக   எதிரணியினர்   எப்படிப்பட்ட  ‘பெரும்புள்ளி’யை   நிறுத்தினாலும்   அவரை   எதிர்ப்பதற்குத்   தயார்   என்கிறார்    அவர்.

“முதலில்  ஜிஇ 14  பிரச்னையில்லாத   எளிதில்   வெற்றிபெறக்கூடிய   தேர்தலாக  இருக்கும்   என்றுதான் நானும்கூட   ஆருடம்   கூறியிருந்தேன்.  ஆனால்,  இப்போது  பார்த்தால்  காலிட்  அப்ட்   சமட் (ஷா   ஆலம்)  போன்றோர்  எல்லாம்   ஜோகூருக்கு   வருவதாகத்   தெரிகிறது.   எல்லாரும்    ஜோகூர்மீது   ஆர்வம்  காட்டுவதால்  நானும்  களத்தில்    இறங்கி    அவர்களுடன்  மோதிப்பார்க்க   முடிவு   செய்து  விட்டேன்”,  என்றாரவர்.

எதிரணியினர்   ஜோகூரைக்  கைப்பற்றுவதைக்  குறியாகக்   கொண்டிருக்கும்    வேளையில்  தாம்   ஒதுங்கிக்கொள்வது   முறையாகாது    என்று  ஷாரிர்   குறிப்பிட்டார்.