நெல்லை முருகனைத் தொடர்ந்து கேரளாவில் மற்றொரு தமிழருக்கு சிகிச்சை தர மறுப்பு

திருச்சூர்: கேரளாவில் தமிழருக்கு சிகிச்சை அளிக்க அம்மாநில மருத்துவமனைகள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கு அரிவாளால் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மிகவும ஆபத்தான நிலையில் எடுத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து ராஜேந்திரனின் உறவினர்கள் அங்கிருந்து அவரை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் தற்போது கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் கேரளாவில் விபத்தில் சிக்கினார்.

அவரை சிகிச்சைக்காக கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்துக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் வருத்தம் தெரிவித்திருந்தார். மிகவும் மோசமான நிலையில் இருந்த நோயாளிக்கு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தது குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தையும் அம் மாநில அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

 

TAGS: