நஜிப் அரசு ஊழியர்களைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்கிறார் அஸ்மின் அலி

 

சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி அரசு ஊழியர்களைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்.

அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் எங்கிருந்தாலும் சரி, நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியும் என்றாரவர்.

எதிரணியினர் ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் சாத்தியம் இல்லை என்று பிரதமர் நஜிப் நேற்று அவர்களுக்கு விடுத்திருந்த எச்சரிக்கைக்கு எதிர்வினையாற்றிய அஸ்மின் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசு என்ன சாதித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளும் அளவிற்கு அவர்கள் முதிர்ச்சியடைந்தவர்களாக இருக்கிறார்கள் என்று கூறிய அஸ்மின், இச்சாதனை பெரும்பாலும் அவர்களின் பங்களிப்பால் விளைந்ததாகும் என்று தாம் எப்போதும் கூறிவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் அரசு ஊழியர்களைப் பாராட்டிய அஸ்மின். சிலாங்கூர் மிகவும் மேம்பாடடைந்த மற்றும் வெற்றிகரமான மாநிலமாக இருப்பதற்கு அவர்கள்தான் காரணம் என்றார்.

“அதனால்தான், மத்திய அரசுடன் ஒப்பிடுகையில் நாங்கள் அவர்களுக்கு இரண்டு மாத போனஸ் தருகிறோம்,

“அரசாங்க ஊழியர்கள், மாநில மற்றும்  மத்திய அரசு ஊழியர்கள்,, ஆற்றியப் பங்களிப்பை கீழறுப்பு செய்ததின் வழி பிரதமர் தவறு செய்து விட்டார். ஏனென்றால் அரசு ஊழியர்கள் அரசியலில் சம்பந்தப்படவில்லை. அவர்களை அரசியலுக்கு இழுக்கக்கூடாது.

“அவர்களுக்கு புத்ரா ஜெயாவில் என்ன நடக்கிறது என்பது தெரியும்”, என்று அஸ்மின் அலி மேலும் கூறினார்.