மஇகா அதன் கடமையைச் செய்திருந்தால் இந்தியர்களுக்கு ஒரு செயல்திட்டம் தேவையில்லையே

மக்கள்  கருத்து   ‘இந்தியர்களுக்காக  மஇகா  நிறைய  செய்திருந்தால்   அவர்கள்  இன்னும்  ஏழைகளாக  இருப்பது ஏன்?’

 

பெயரிலி2475:  மஇகா  பொருளாளர்  எஸ். வேள்பாரி   அவர்களே,  நீங்கள்    டிஏபியைப்  பார்த்து   இந்தியர்களுக்கு   என்ன   செய்தாய்   என்று   கேட்டீர்களே,  ஒரு   கேள்வி   அது   சிறுபிள்ளைத்தனமான   கேள்வி.  இந்தியர்களில்  ஏழைகளாக   இருப்போருக்கும்  தமிழ்ப்   பள்ளிகளுக்கும்  உதவ   மஇகாவிடம்தான்  மில்லியன்  கணக்கில்   கொடுக்கப்பட்டது.

பிஎன்  அரசாங்கம்   இந்தியர்களுக்கு   உதவ    டிஏபி-இடமா   நிதியை  ஒதுக்கிக்  கொடுத்தது?.  டிஏபி-இன்   லிம்  கிட்  சியாங்கும்   பினாங்கு   துணை  முதல்வர்  II பி.இராமசாமியும்   உங்களைக்  கேட்கிறார்கள்  மைக்கா  ஹோடிங்ஸ்   பணமும்   டெலிகோம்  பங்குப்  பணமும்   எங்கே   என்று.  அதற்குப்  பதில்   சொல்லுங்கள்.  அவர்களுக்கும்   இந்தியர்களுக்கும்   பதில்   சொல்லக்  கடமைப்பட்டிருக்கிறீர்கள்  நீங்கள்.

சமூகத்தை   ஏமாற்றிய   நீங்கள்  டிஏபியைப்  பார்த்து  வெட்கமில்லாமல்  கேட்கிறீர்கள்    இந்தியர்களுக்கு   என்ன   செய்தாய்   என்று.

குய்கோன்: ஹரபான்  இந்தியர்களுக்கு   குத்தகைகளை  வழங்கவில்லைதான்( அதுதானே  பிஎன்  கட்சிகளுக்குப்  பிடிக்கும்).

அது  இந்தியர்களுக்கு  நீதி  நியாயம்  கிடைக்கப்  போராடுகிறது.

தடுப்புக்காவல்  மரணம்,  ஒருதலைப்பட்ச  மதமாற்றம்  ஆகியவற்றை  எதிர்த்தும்  தேசியப்  பள்ளிகளுடன்  தாய்மொழிப்  பள்ளிகள்  தொடர்ந்து  இருக்க  வேண்டும்  என்பதற்காகவும்   சுதந்திரமான  நியாயமான  தேர்தல்களுக்காகவும்   போராடி  வருகிறது.   பிரிக்பீல்சை   அழகுப்படுத்துவதை  விட  இவை   இந்தியர்களுக்கு  முக்கியமானவை.

இறுதியாக  வந்தவன்:  வேள்பாரி. அபத்தமாக   பேசாதீர்.  தேசியப்  பதிவுத்துறையிலோ,   ஷியாரியா  நீதிமன்றத்திலோ   போலீசிலோ,   கல்வி  அமைச்சிலோ  கிட்  சியாங்கும்  இராமசாமியும்   என்ன  சொன்னாலும்  எடுபட்டாது.  அதற்குரிய   அதிகாரம்   அவர்களுக்கு  இல்லை.  உங்களுக்கு  உண்டு.

மணவிலக்கு  பெற்ற  எம்.இந்திரா  காந்திக்கு  அவரின்  பிள்ளைகளை  மீட்டுத்தரக்கூட  உங்களால்   முடியவில்லை.  இந்தியாவிலிருந்து  தப்பி  ஓடிவந்த   சமயப்   பேச்சாளர்    ஜாகிர்  நாய்க்குக்கு  நிரதந்தர  வசிப்பிடத்   தகுதி   வழங்க  முடிகிறது,  ஆனால்  உங்கள்  இனத்தாரோ   பல  தசாப்தங்களாக    நாடற்றவர்களாக  உழன்று  கொண்டிருக்கிறார்கள்.

ஐபி:  நீங்கள்   கூறிக்கொள்வதுபோல்   இந்தியர்களுக்காக   மஇகா   நிறைய  செய்திருந்தால்   அவர்கள்  இன்னும்  ஏழைகளா   இருப்பது   ஏன்?
லிம்முக்கும்  இராமசாமிக்கும்   தேசியக்  கொள்கைகளை   வகுப்பதில்    எந்தப்  பங்கும்  இல்லையே,    அவர்களை   ஏன்   கேட்கிறீர்கள்?.

பெயரிலி  40எப்4:  ஏழை  இந்தியர்ர்களுக்காகப்  போராடுவதாகக்  கூறிக்கொள்கிறது  மஇகா,   அது,   ஏழாண்டுகளுக்குமுன்   இந்திரா  காந்தியிடமிருந்து   ஒரு  வயது  குழந்தை  பறித்துச்   செல்லப்பட்டதே   அப்போது  என்ன   செய்தது?

பெயரிலி:  அறிவிலித்தனமாகக்  கேள்விகள்   கேட்டு   உங்கள்  அறிவீனத்தைப்  பறைசாற்றிக்கொள்ளாதீர்கள்.  என்ன  வளம்  இருக்கிறது   எதிர்க்கட்சிகளிடம்  இந்தியர்களுக்கு   உதவ?  அதை  உங்கள்  தந்தையும்   மஇகாவும்தான்   செய்திருக்க   வேண்டும்.

அதைச்   செய்யாமல்  இந்தியர்களைச்  சுரண்டினீர்கள்

அனாக்ராஜா:   நீங்களும்  உங்கள்  தந்தையும்   இந்தியர்களை   ஏமாற்றினீர்கள்.  பெரிதாக   பேசுகிறீர்கள்.  உங்கள்  தந்தைபோல்   நீங்களும்   மஇகா  தலைவராக   முயல்கிறீர்கள்.

ராஜா  சோழன்:  வேள்பாரி   இப்போதெல்லாம் ,   நஜிப்  கறைபடிந்தவர்   என்று     தெரிந்தும்    அவரைத்   துதி  பாடத்   தவறுவதில்லை.

14வது   பொதுத்   தேர்தலில்  மஇகா  வேட்பாளராவதற்குத்தான்  அவர்  இவ்வளவும்   செய்கிறார்   என்பது   தெளிவு.   அப்படியே   அவர்   வேட்பாளராக     தேர்ந்தெடுக்கப்பட்டாலும்   வெற்றிபெற  மாட்டார்.

மக்கள்,  குறிப்பாக   இந்தியர்கள்,   மஇகா  மற்றும்  அம்னோ  வலையில்  மறுபடியும்   விழ  மாட்டார்கள்.

பெயரிலி  2784: பிபிபி   தலைவர்  எம். கெவியெஸ்  பாணியைப்  பின்பற்றுகிறார்   வேள்பாரி.  நஜிப்பைத்  தற்காத்துப்  பேசி   தேர்தலில்  இடம்பெற  விரும்புகிறார்.

வேள்பாரி,  நீங்களும்,  ஒரு  கேள்விக்குப்  பதிலளிப்பதைத்   தவிர்த்து  விடுகிறீர்கள்.  கேள்வி  இதுதான்:  “நீண்ட  காலம்  ஆட்சியில்   இருந்த    டாக்டர்  மகாதிர்   இந்தியர்களுக்கு  எதுவும்   செய்யாதிருந்திருக்கலாம்   ஆனால்,   (நீண்ட  காலம்  அமைச்சராக   இருந்தவரான) உங்கள்   தந்தை  இந்தியர்களுக்காக   என்ன  செய்தார்?”.

எளிய  கேள்வி, இதற்குப்  பதிலளிப்பதும்  எளிதே-  ஒன்றும்ர்ர் இல்லை.

ஹங்  துவா பிஜே:  உங்கள்   தந்தை   மஇகா  தலைவராக  இருந்தபோது  கடமையைச்   சரிவர   செய்திருந்தால்  இன்று  இந்தியர்களுக்கு  ஒரு   செயல்திட்டம்  வரைய   வேண்டிய   அவசியமிருக்காதே.