ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு நடந்த கொடூரம் என்ன தெரியுமா?

உத்தர பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் ஐந்து குழந்தைகள் மூளையழற்சி நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். கோரக்பூர் மருத்துவமனையில் தொடரும் சோகம்: ஒரே நாளில் 5 குழந்தைகள் பலி லக்னோ: உத்தர பிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த சோகம் அடங்குவதற்குள், கடந்த வாரம் அதே மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் உயிரிழந்தனர். மூளையழற்சி, ஒவ்வாமை, நிம்மோனியா காய்ச்சல், சீழ்பிடிப்பு போன்ற காரணங்களால்தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் மூளையழற்சி நோய் காரணமாக மேலும் ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தாண்டு இம்மருத்துவமனையில் மூளையழற்சி நோயினால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 1435 பேர் முளையழற்சி நோயின் காரணமாக பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 1303 பேர் உயிரிழந்துள்ளனர், 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

-athirvu.com

TAGS: