பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் 20 பேர் பலி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில்  பலுசிஸ்தான் பகுதியில் சூபி பிரிவினர் அதிகம் உள்ளனர்.  அங்குள்ள மசூதியில் நேற்று இரவு ஏராளமானோர் கூடியிருந்தனர்.  அப்போது சந்தேகத்திற்குரிய  நபர் ஒருவர் உள்ளே நுழைய முயன்றான்.

அப்போது அவனை பாதுகாப்பு   பணியில் இருந்த  போலீஸ்காரர் தடத்து நிறுத்தினர். உடனே அவன்தான் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.

இதனால் அங்கு பலத்த சத்தத்துடன் கட்டிடங்கள் இடிந்தன.

இத்தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.  அவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 2 போலீசார் அடங்குவர். மேலும் 25 பேர் காயம் அடைந்தனர்.  அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இதனால் பலி எண்ணிக்கை  உயரும் என  அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானில் சூபி பிரிவினரின் பள்ளி வாசலில் இந்த ஆண்டில்  தீவிரவாதிகள் நடத்திய 2-வது தாக்குதல் இதுவாகும். சிந்து மாகாணம் ஷெவான் ஷெரீப்பில் கடந்த  பிப்ரவரி மாதம் தற்கொலை  தாக்குதல் நடத்தப்பட்டது.  அதில் 80 பேர் பலியானார்கள். 250 பேர் காயம் அடைந்தனர்.

-dailythanthi.com