ஸைட் இப்ராகிம்: அம்னோவிலிருக்கும் எவரையும்விட கிட் சியாங் சிறந்த பிரதமராக இருப்பார்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால், டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பிரதமர் ஆகும் சாத்தியம் பற்றி அம்னோ தலைவர்கள் விடாது கரைந்து கொண்டிருப்பது பற்றி குறிப்பிட்ட ஸைட் இப்ராகிம், இது ஒரு தவறான கருத்தாக இருக்க முடியாது என்றார்..

இதை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். அம்னோ தலைவர்கள் இதை மிகக் கடுமையாக வலியுறுத்திக் கொண்டிருந்தால், இது ஒரு நல்ல கருத்துதான்

ஒரு கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சரான ஸைட் இப்ராகிம், அம்னோவிலிருக்கும் எவரையும்விட லிம் கிட் சியாங் சிறந்த பிரதமராக இருப்பார் என்பதில் தமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.

முன்னதாக, மலேசியாகினியின் ஒரு கட்டுரையில், அடுத்தப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றால் லிம் பிரதமர் ஆவார் என்று இரு அம்னோ அமைச்சர்கள், சாலே சைட் கெருவாக் மற்றும் அப்துல் ரஹ்மான் டாலான், கூறியிருந்தது மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. அது குறித்து மேலும் விவரித்த ஸைட் இப்ராகிம், “முதன்மையான கருத்து. மக்கள் அவர்களிடம் ஒப்படைத்த முழுமனதான நம்பிகையைத் தவறாகப் பயன்படுத்தியவர்களைவிட கிட் சியாங் சிறந்தவராக இருப்பார் என்றார்.