மிஸ்டர் பீனை பார்த்து சிரித்தவர்களை கண்ணீர் விட வைக்கும் வாழ்க்கை பின்னணி!

மிஸ்டர் பீன் என்று சொன்னால் சிரிக்காதவர்களையும் சிரிக்க வைக்கும். இவரது காமெடி ஷோவை பார்த்து நாம் சிரித்து மகிழ்ந்திருப்போம். ஆனால் இவரின் வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் சோகம் உங்களுக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகம் தான். மனதை கரைய வைக்கும் நிகழ்வு தான் இது.

ரோவன் அட்கின்ஸன் என்பது இவரின் உண்மை பெயர். ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயது முதலே கடின உழைப்பாளியாம்.

இவரின் இந்த திறமையால் தான் சர்வதேச புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு நடிக்கும் ஆர்வம் அப்போது தான் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இவரால் சரியாக பேச முடியாததால் காமெடி குரூப்பில் இருந்து ஒதுக்கியுள்ளார்கள். மேலும் பல தொலைக்காட்சிகள் இவரின் பேச்சு குறைபாடால் அவரை நிராகரித்தார்களாம்.

மேலும் அவருக்கு ஸ்டார் நட்சத்திரம் போன்ற அழகில்லை, ஹீரோவுக்கான உடல் வாகு இல்லை என பட வாய்ப்புக்கள் கொடுக்காமல் தட்டி கழித்தார்களாம். ஆனால் அவர் தன் மனதை மட்டுமே நம்பினார்.

தன் மீதிருந்த நம்பிக்கையை விடவில்லை. தன்னை தவிர மற்ற கேரக்டர்களை செய்யும் போது இவருக்கு பேச்சு திணறல் இல்லையாம். அந்த விசயத்தை கொண்டு அவர் தானாக தனக்கென உருவாக்கிய காமெடி ஷோ தான் மிஸ்டர் பீன். இதனை உலகமே வரவேற்றது.

மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை பார்த்து சினிமா உலகம் மூக்கில் விரல் வைத்ததாம். ஒதுக்கியவர்களில் பார்வை இவர் மீது திரும்பியது. தற்போது இவரின் சொத்தின் மதிப்பு 132 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

சர்வதேச வானொலியில் இவரது குரல் காமெடி ஷோ மூலம் ஒலித்தது. பின் டிவி, சினிமா என பல வாய்ப்புகள் என அவர் வாசல் வந்து நின்றன. சினிமாக்காரர்கள் எப்படியும் வாழலாம் என நினைப்பவர்கள் மத்தியில் இவர் ஒரு முறை மட்டுமே திருமணம் செய்துகொண்டார். அதுவும் காதல் திருமணம்.

அவரின் மனைவி யார் அதே சர்வதேச வானொலியில் மேக்கப் ஆர்டிஸ்டாக இருந்த சுனித்ரா சாஸ்திரி. இருவருக்கும் பென், லில்லி என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். இன்று சர்வதேச மனநல நாள்.

மன நலம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற அவரின் வாழ்க்கை இந்த நாளில் நமக்கு சொல்லும் பாடம். வெற்றிக்கு தேவை அழகும், உடலமைப்பும் இல்லை கடின உழைப்பே அவரின் வலிகள் சொல்லும் வார்த்தைகள்..

-cineulagam.com