பெர்சே 4 குற்றச்சாட்டிலிருந்து மரியா சின் விடுவிக்கப்பட்டார்

 

பெர்சே 4 பேரணியை 2015 இல் ஏற்பாடு செய்ததற்காக பெர்சே 2.0 தலைவர் மரியா சின் மீது அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டம் 2012 டின் கீழ் சாட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு செய்திருந்த மேல்முறையீட்டை சாபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும் தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு ஏகமனதாகத் தள்ளுபடி செய்தது.

இத்தீர்ப்பு மரியா சின்னை விடுவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநிறுத்துகிறது. இந்த வழக்கு செசன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியது, அது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முடிவடைய வேண்டும் என்று மலான்ஜும் கூறினார்.

போலீஸுக்கு 10 நாள் அறிவிப்பு கொடுக்கத் தவறி விட்டதற்காக அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டத்தின் கீழ் மரியா சின் மீது நவம்பர் 3, 2015 இல் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு முடிவுற்றது குறித்து மரியா மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆயினும், அவரும் இன்னும் இருவரும் இதே சட்டத்தின் கீழ் கித்தா லவான் பேரணியை ஏற்பாடு செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.