பிறப்பு குறித்த காலத்திற்குள் பதிவு செய்யப்படாவிட்டால், அபராதம் ரிம1000: ஏழைக்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும், எதிரணியினரின் சாடல்


பிறப்பு குறித்த காலத்திற்குள் பதிவு செய்யப்படாவிட்டால், அபராதம் ரிம1000: ஏழைக்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும், எதிரணியினரின் சாடல்

 

பிறப்பு பதிவு செய்யப்படும் விவகாரத்தில், ரிம1,000 அபராதம் விதிக்க உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை சட்டப்பூர்வமானதா என்ற கேள்வியை எதிரணியினர் எழுப்பியுள்ளனர்.

இந்த அளவுக்கு அதிகமான அபராதம் ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்பதோடு இந்நடவடிக்கை நாடற்ற குழந்தைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாரம் செவ்வாய்க்கிழமையிலிருந்து முன்னதாக ரிம50தாக இருந்த அபராதம் அதிகரிக்கப்படும் நடவடிக்கை அமலுக்கு வருகிறது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1957 மற்றும் சுவீகாரச் சட்டம் 1952 களுக்கான திருத்தம், அதில் அனைத்து பிறப்புகளும் 60 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் விதியும்கூட, முறை தவறிப் பிறந்த குழந்தைகள் உட்பட, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அரசாங்கம் இந்த அபராத அதிகரிப்பு முடிவைச் செய்தது என்று துணை உள்துறை அமைச்சர் கூறியதாக பெர்னாமா தெரிவிக்கிறது.

இதற்கான காரணத்தை பின்னர் விளக்கிய துணை அமைச்சர் நூர் ஜாஜ்லான், பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகளை உடனடியாகப் பதிவு செய்யவும், அவ்வாறு செய்யாததால் பின்னர் எழும் ஆவணம் பற்றிய பிரச்சனைகளால் அவர்களின் குழந்தைகள் நாடற்றவர்களாவதைத் தவிரிக்கவும் பெற்றோர்களுக்கும் அழுத்தம் கொடுப்பது இதன் நோக்கம் என்றார்.

இது கடுமையான விவகாரம்

அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஸுரைடா கமாருடின், தேசியப் பதிவு இலாகாவுக்கு இந்தத் தண்டனையை விதிக்கும் அதிகாரம் இல்லை. மேலும், இச்சட்டம், அதன் திருத்தங்கள் உட்பட, தண்டனைகள் பற்றி எதையும் திட்டவட்டமாக கூறவில்லை.

இது ஒரு கடுமையான விவகாரம். இது ஒவ்வொரு மலேசியரையும் பாதிக்கிறது என்பதால், இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் இன்று வெளியிட்ட ஒர் அறிக்கையில் கூறுகிறார்.

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் இதை கடுமையாக எதிர்க்காவிட்டால், நான் எனது கடமையிலிருந்து தவறி விட்டதாகும்”, என்று பிகேஆர் வனிதா தலைவரான அவர் மேலும் கூறினார்..

ரிம1,000 அபராதம் கட்ட முடியாத பெற்றோர்களின் நிலை என்னவாகும்?

ஏன் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்ய தவறிவிடுகிறார்கள் என்பதை தேசியப் பதிவு இலாகா முதலில் கண்டறிய வேண்டும் என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் கூறினார்.

கூடுதல் அபராதம் விதிப்பது பிரச்சனையைத் தீர்த்து விடாது என்று கூறிய அவர், ரிம1,000 அபராதம் கட்ட இயலாத பெற்றோர்களுடைய குழந்தைகளின் கதி என்னவாகும் என்று அவர் வினவினார்.

இந்நாட்டில் 18 வயதிற்கும் குறைவான 290,437 நாடற்ற குழந்தைகள் இருப்பதாக கடந்த அக்டோபரில் உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • நல்லா யோசிங்க... wrote on 12 அக்டோபர், 2017, 22:03

  சுமை தரும் அபராதமாக இதை யாரும் கருதக்கூடாது. 60-நாள் கால அவகாசம் இருக்கிறது. போதுமான இந்த கால அவகாசத்துக்குள் பிறப்பை பதிவு செய்ய முடியாதவர்கள் அந்தக் காலக்கட்டத்துக்குப் பின் பதிவு செய்ய மறந்துவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இது போன்ற தேவையற்ற விவாதங்களுக்கு நேரம் செலவழிப்பதை விட வானத்தை நோக்கிப் பறக்கும் ராக்கேட் வேகத்தில் துயரும் அத்தியாவசிய உணவுப் பொருள் விலையேற்றத்த தடுக்க ஏதாவது செய்யப்பாருங்கள் எதிரணியினரே…

 • ஜி. மோகன்- கிள்ளான் wrote on 12 அக்டோபர், 2017, 22:08

  இது ஒரு மிக பெரிய தொகை. மக்களை அதிக சுமை படுதும் செயல். ஆயிரம் வெள்ளி என்பது சிறிய தொகை இல்லை. பணக்காரகளுக்கு சுமை தெரியது. முதலில் ஒரு சிறு அபராதம் விதிக்கலாம் அடுத்து மூன்று முறை கழித்து தண்டனை தொகையை அதிகரிக்கலாம். அதில் தவறுகள் எதுவும் இல்லையே. நாடு பண வீக்கத்தில் இருக்கிற இன் நிலையில் ஏன் இந்த மாதிரி….. என்ற கேள்விகள் வருகின்றன. மக்கள் தவறுகள் செய்வது இயல்புதான் அதை அரசாங்கம் தான் நிவர்த்தி செய்ய வேண்டும். எதை எடுத்தாலும் வாங்கினானும் இன்று விலைகள் அதிகரித்து உள்ளன. இன் நிலையில் இது வேறு. இன்று மக்களின் சுமைகளை சீர் துக்கி பார்க்க வேண்டும். அரசாங்க உயர்ந்த பதவியில் இருபவர்களுக்கு தெரியத மக்களின் சுமைகள். காரணம் அவர்களின் வருமானம் அவர்களுக்கே தெரியது எவ்வளவு செலவு செய்கிறோம் என்று. அதே வேலையில் சாதாரண ஒரு தொழிலாளிக்கு அவரின் மாத வருமானம் கண்ணிர் சிந்தும் அளவு இருக்கும். திரு. என். எஸ். கிருஷ்ணன் பாடல் ஞாபகம் வருகிறது ஒன்றில் இருந்து இருபது வரை கொண்டாடம் அது முடிந்த பிறகு திண்டாடம் என்று. இது ஏழைகளுக்கு தான் பொருந்தும். பணக்காரன்களுக்கு மாதம் தோறும் கொண்டாடம்.

 • RAHIM A.S.S. wrote on 13 அக்டோபர், 2017, 10:18

  அபராதம் RM 1000 – வரவேற்க கூடிய அபராதம்.
  இனிமேலாவது குறிப்பாக இந்திய பெற்றோர்கள் குறித்தகால அவகாசத்திற்குள் தங்கள் குழந்தைகளின் பிறப்பு பதிவை பதிவு செய்து , பிற்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்ப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
  தங்கள் கடமையை செய்ய தவறும் இந்திய பெற்றோர்கள் பின்னர் அரசியல் கட்சிகளையும்-அரசாங்கத்தையும் குறை கூறுவதில் பயனில்லை. 

 • abraham terah wrote on 13 அக்டோபர், 2017, 12:23

  பதிவு செய்வதற்கு போதுமான அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்ப நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒரு வருஷம் கொடுக்கலாமா? நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்யுங்களேன்!

 • singam wrote on 13 அக்டோபர், 2017, 14:10

  நல்ல ஐடியா! வரவேற்கிறேன். பதிவு செய்யத் தவறுவோர், அந்த தண்டனை தொகையான ஆயிரம் வெள்ளியை வந்து ம.இ.கா விடம் பெற்றுக் கொள்ளலாம். போக்குவரத்து செலவு மேலுமொரு ஐநூறு வெள்ளி சேர்த்துக் கொல்லப் படும், என ஒரு போடு போடுங்கள். இதனால் நமது மக்கள்தொகை (இந்தியர்கள் மட்டும்) பெறுக வழி ஏற்படும்.    

 • s.maniam wrote on 13 அக்டோபர், 2017, 19:01

  இது ஒரு வரவேற்க கூடிய செயல் ! அபராதம் 60 நாட்களில் பதிவு செய்ய தவறுபவர்கள் தானே ! அனாக் லுவார் நிக்காஹ் தான் பயப்படவேண்டும் ! மக்களும் இதை போன்ற அபராத தொகையினால் ஒழுக்கம் அற்ற முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதையும் தவிர்க்கலாம் ! வங்காள தேசியிடமும் ! இந்தோனேஸிகளிடமும் ! முறையற்று குடும்பம் நடத்துவதை தடுக்கலாம் ! அந்த காலத்தில் இதை போன்ற அதிரடி சட்டங்கள் இல்லாததால் தான் நமது இந்திய சமுதாயத்தில் பிறப்புரிமை இல்லாத பிள்ளைகளும் ! மக்களும் இன்னும் அடையாள பத்திரத்துக்கு அவதி படும் நிலைமை ஏற்பட்டது ! நமது இந்திய பொது அமைப்புகள் நமது மக்களுக்கு இதை போன்ற முக்கியமான விஷயங்களை மக்களுக்கு எடுத்து கூற கடமை பட்டுயிருக்க வேண்டும் ! ம .இ . கா .காரனை இதில் இழுக்க வேண்டாம் ! பாவம் அவனுங்க பொழப்பே நாரி கெடக்குது ! எவனை நிருத்தரது ! எவனை தூக்கறது என்று சுப்பிரமணி குழப்பத்தில் குப்புற படுத்து கிடக்கிறார் !!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: