பிஎன் மீண்டும் சிலாங்கூரை கைப்பற்ற காலிட் உதவப் போகிறாராம், இன்னொரு முன்னாள் எம்பி கூறுகிறார்

 

அடுத்தப் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் பிடிக்க பல முன்னாள் மந்திரி பெசார்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் மந்திரி பெசார்களான கிர் தோயோ, அபு ஹசான் மற்றும் முகமட் தாயிப் ஆகியோர் இதில் பங்கேற்பர் என்று சிலாங்கூர் பிஎன் தலைவர் நோ ஒமார் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் நான்காவது மந்திரி புசாராக ஆறு ஆண்டுகளுக்கு பதவியிலிருந்த பிகேஆர் தலைவர் அப்துல் காலிட் பாரிசானுக்கு உதவி அளிப்பார் என்று அபு ஹசான் கூறிக்கொண்டார்.

தங்களுக்கு எல்லாம் வயதாகி விட்டது. கிர் தோயோ மிகவும் இளைவர், ஆனால் அவருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன என்று மலேசியாகினியிடம் கூறிய அபு ஹசான், காலிட்டுக்கு வயது குறைவு என்று கூறினார்.

இது சம்பந்தமாக காலிட்டுடன் தொடர்பு கொள்ளப்பட்டதா என்று கேட்ட போது, காலிட் உதவுவதற்கு தயாராக இருக்கிறார் என்று கூறிய அபு ஹசான், இப்போது தங்கள் பக்கம் நான்கு முன்னாள் மந்திரி பெசார்கள் இருக்கிறார்கள் என்றும் தாம் அது பற்றி நோ ஒமாரிடம் பேசியுள்ளதாகவும் அபு ஹசான் கூறினார்.

அபு ஹசான் கூறிக்கொண்டது பற்றி கருத்துரைக்கும்படி கேட்டதற்கு, காலிட்டின் உதவியாளர் பாகா ஹுஸ்ஸின், முன்னாள் மந்திரி பெசார் காலிட் 14 ஆவது பொதுத் தேர்தலில் அவரது நிலைப்பாடு என்ன என்பதை வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார் என்று கூறினார்.