போரெக்ஸ் விசாரணையின் முடிவு பேரரசரிடம் அளிக்கப்பட்டது

 

பேங்க் நெகாரா அந்நியச் செலாவணி விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம் அதன் விசாரணையின் முடிவை பேரரசரிடம் இன்று அளித்தது.

அந்த விசாரனையின் 400-பக்க அறிக்கையை விசாரணை ஆணையத்தின் தலைவர் முகமட் சிடெக் ஹசான் இஸ்தானா நெகாவில் பேரரசரிடம் வழங்கினார்.

பேரரசர் அந்த அறிக்கையை அரசாங்கத்திடம் அளிப்பார் என்று தெரிவித்த முகமட் சிடெக், ஆணையத்தின் முடிவுகள் பற்றி பேரரசருக்கு தாம் விளக்கம் அளித்தாகக் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசாங்கத்தைப் பொறுத்ததாகும் என்று சிடெக் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி கூறுகிறது.

இந்த போரெக்ஸ் விவகாரம் 1980களில் மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் நடந்தது. இந்த போரெக்ஸ் அரச விசாரணை மகாதிர் மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள பிரதமர் நஜிப் எடுத்துக் கொண்ட நடவடிக்கை என்று சில தரப்பினர் நஜிப்பின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

அரச ஆணயம் நடத்திய விசாரணையில் 25 சாட்சிகள், முன்னாள் பிரதமர் மகாதிர், முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் டயம் ஸைனுடின் உட்பட, சாட்சியமளித்தனர்.

விசாரணையின் போது 42 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.