அமெரிக்க அதிகாரிகளை அதிரவைத்த புலிகளின் அசாத்திய கண்ணிவெடி

முகமாலையில்  அமெரிக்க&ன்ப்ச்ப்; டாஸ்  நிறுவனத்தினால் மீட்கப்பட்டு வருகின்ற, விடுதலைப்புலிகளின்  சுய தயாரிப்பு குண்டுகளை  கண்டு அமெரிக்க தூதுக்குழுவினர்&ன்ப்ச்ப்; ஆச்சரியம்  அடைந்துள்ளனர்.யாழ்ப்பாணம்  – கிளி நொச்சி மாவட்டங்களின் இடையில்  அமைந்துள்ள முகமாலையில் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்ற நிலையில் அப்பகுதியில் வெடி அகற்றும் செயற்பாடுகளை  அமெரிக்க தூதரக குழுவினர் இன்று  நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அமெரிக்காவின்  நிதி உதவியின்மூலம் டாஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும்  கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளையே குறித்த குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.இதன்போது,  சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளினால்  பாவிக்கப்பட்ட அபாயகரமான வெடி, கண்ணி வெடிகள்,  கைகுண்டுகள், செல்கள் கிளைமோர் குண்டுகள்  மற்றும் விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட பாரிய வெடி பொருட்கள்  தொடர்பில் அமெரிக்க தூதரகக் குழுவினருக்கு டாஸ்  நிறுவன அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது  விடுதலைப் புலிகளால் சுயமாகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளைக் கண்டு அமெரிக்க தூதுக்குழுவினர்  வியப்படைத்துள்ளதாக தெரியவருகிறது.குறிப்பாக  உள்ளூர் இரும்பு மற்றும் தகரம்  போன்ற மூலங்களைக் கொண்டு வித்தியாசமான முறையில்  அதிக ஆபத்துக்களை ஏற்படுத்தவல்ல வெடிபொருட்களையே குறித்த குழுவினர் ஆச்சரியத்தோடு  பார்த்துள்ளனர்.இதேவேளை  போர்க்காலத்தில் முகமாலை முன்னரங்கு மிகப்பெரிய  யுத்த சூனியப் பிரதேசமாக விளங்கியதோடு  விடுதலைப் புலிகள் தம்மால் சுயமாகத்  தயாரித்த வெடிகுண்டுகளைக் கொண்டு சிறிலங்கா, இராணுவத்தினருக்கு பாரிய இழப்புக்களினை ஏற்படுத்தியிருந்தமை  இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

-athirvu.com

TAGS: