ரிம 1.5 பில்லியன் மோசடி – விளக்கமளிக்க ‘டத்தோ’ ஒருவர் அழைக்கப்பட்டார்

இன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), சபாவில் கிராமப்புற அபிவிருத்தி நிதிகளில் நடந்த மோசடி குறித்த விசாரணைகளுக்கு உதவ, ‘டத்தோ’ அந்தஸ்து கொண்ட தொழிலதிபர் ஒருவரை அழைத்தது.

ஆதாரங்களின்படி, கிராமப்புற மற்றும் கூட்டரசுப் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் ஒப்புதல் பெற்ற, குறைந்தபட்சம் 7 நிறுவனங்களை அத்தொழிலதிபர் தனது கட்டுப்பாட்டின் கீழ், கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த 7 நிறுவனங்களைத் தவிர்த்து, அத்தொழிலதிபர் தன் நண்பரின் உரிமங்களுக்கு தலா RM30,000 செலுத்தி, இரவலும் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

வரையறுக்கப்பட்ட தெண்டரின் விதிமுறையான, ஒரு திட்டத்திற்கு 10 நிறுவனங்கள் எனும் தகுதியைப் பூர்த்தி செய்ய, அவர் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.

அத்தொழிலதிபர் கைதானதை, எம்.ஏ.சி.சி-யின் துணை ஆணையர் அஷாம் பாக்கி உறுதிபடுத்தினார்.