முகலாயர்கள் ஆட்சி “காட்டுமிராண்டித்தனமானது” சங்கீத் சோம் கருத்துக்கு பா.ஜனதா ஆதரவு

லக்னோ, பாரதீய ஜனதாவில் சர்ச்சை பேச்சுக்கு பெயர்போன எம்.எல்.ஏ. சங்கீத் சோம் பேசுகையில், “முகலாயர்கள் இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்தவர்கள். வரலாறு என்ற பெயரில் துரோகிகளை மகிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். அவர்களது பெயர்கள் வரலாற்றில் இருந்து நீக்கப்பட வேண்டியது. தாஜ்மஹாலை கட்டியவர் சொந்த மகனால் சிறையில் வைக்கப்பட்டார். இந்த கதையையா வரலாறு எனக் கொண்டாடுவது?” என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே உத்தரபிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசு மாநில சுற்றுலாவிற்கான வழிகாட்டியில் இருந்து தாஜ்மஹாலை நீக்கியது பெரும் சர்ச்சையாக்கியது. இப்போது சங்கீத் சோம் பேச்சும் சர்ச்சையாகி உள்ளது.

இவ்விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில அரசு சங்கீத் சோம் கருத்தில் இருந்து விலகிக்கொண்டது. ஆனால் தாஜ்மகால் குறித்து சங்கீத் சோம் கூறியவை அனைத்தும் அவரது சொந்த கருத்துகள் என்றும், இதற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பா.ஜனதா கூறியது.

இருப்பினும் முகலாயர்கள் ஆட்சி “காட்டுமிராண்டித்தனமானது” சங்கீத் சோம் கருத்துக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்து உள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நரசிங்கா ராவ் பேசுகையில், தேசத்தில் முகலாயர்கள் ஆட்சியானது கவலைக்குரியது, முகலாயர்கள் ஆட்சி காலத்தை, சுரண்டல், காட்டுமிராண்டித்தனமானது என்றுதான் விவரிக்க முடியும். முகலாயர்கள் ஆட்சிக்காலம் ஒப்பிட முடியாத சகிப்புத்தன்மையற்றது இது இந்திய நாகரிகம் மற்றும் மரபுகளை பெருமளவில் பாதிக்க செய்தது, என கூறிஉள்ளார்.

-dailythanthi.com

TAGS: