சுப்ரமணியம்: கேமரன் மலை மஇகா-வுக்கே, பிரதமரே தெரிவித்து விட்டார்

கேமரன்  மலை     நாடாளுமன்றத்   தொகுதி   மஇகாவுக்குத்தான்   என்கிறார்   அதன்  தலைவர்   டாக்டர்  எஸ். சுப்ரமணியம்.

மைபிபிபி   தலைவர்   எம்.கேவியஸ்,  கேமரன்  மலை   மைபிபிக்குத்   திரும்பக்  கொடுக்கப்படும்    என்று   கூறிக்கொண்டிருந்தாலும்   அது   உண்மை   அல்ல    என்று   சுப்ரமணியம்   சொன்னார்.

“அத்தொகுதி     மஇகாவுக்குத்தான்  என்பதையும்    அது   மற்ற  கட்சிகளுக்கு    மாற்றிவிடப்படாது   என்பதையும்   பிரதமரே  என்னிடம்    தெரிவித்தார்”,  எனச்   சுகாதார  அமைச்சருமான    சுப்ரமணியம்   கூறினார்.