பாதிரியார் கடத்தல் சம்பவம் போலீஸ் நடவடிக்கைபோல் உள்ளதாக ஐஓ கூறினாராம்

பாதிரியார்  ரேய்மண்ட்   கோ   காணாமல்போனதை  விசாரித்துவரும்   போலீஸ்  அதிகாரி (ஐஓ)  ஒருவர்,  அச்சம்பவம்  போலீஸ்   நடவடிக்கைபோல்   அமைந்திருப்பதாகக்  குறிப்பிட்டார்   என இன்று   மனித   உரிமை    ஆணைய(சுஹாகாம்)  பொது  விசாரணையில்   தெரிவிக்கப்பட்டது.

சுஹாகாமிடம்  சாட்சியம்   அளித்த   ரோஷன்   செலஸ்டின்  கோமஸ்,    தாம்  அக்கடத்தல்   சம்பவம்   பற்றி   புகார்   செய்ய  கிளானா   ஜெயா   போலீஸ்  நிலையம்    சென்றபோது   அங்கிருந்த   விசாரணை  அதிகாரி(ஐஓ)  அவ்வாறு  கூறியதாகக்  குறிப்பிட்டார்.

“கவலை   வேண்டாம்.  நடந்ததையெல்லாம்   பார்க்கையில்    அது   ஒரு   போலீஸ்  நடவடிக்கைபோல்    தோன்றுகிறது  என்றாரவர்”.

கடந்த   நவம்பரிலிருந்து   காணாமல்போன   நால்வர்    குறித்து  சுஹாகாம்   நடத்திவரும்   பொது  விசாரணையில்   இன்று    முதலாவது    சாட்சியாக   கோமஸ்     சாட்சியமளித்தார்.

கோ,  பிப்ரவரி    13-இல்   பெட்டாலிங்    ஜெயாவில்    கடத்தப்பட்டார்.   போக்குவரத்து   மிகுந்த   ஒரு    தெருவில்  முகமூடி   மனிதர்கள்  அவரைக்  கடத்திச்  சென்றது   ஒரு   காணொளி  மூலமாக     தெரிய     வந்தது.