ஷாபியைக் கைது செய்வதற்கு சட்ட அடிப்படை ஏதும் இல்லை, எம்பி கூறுகிறார்

 

பார்டி வாரிசான் சாபாவின் தலைவர் ஷாபி அப்டாலைக் கைது செய்வதற்கு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு (எம்எசிசி) சட்ட அடிப்படை ஏதும் இல்லை என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான என். சுரேந்திரன் கூறுகிறார்.

எம்எசிசிக்கு விசாரணை நடத்துவதற்காக கடப்பாடு இருக்கிறது. ஆனால், கைது செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. சந்தேகிப்படும் நபர் தப்பிவிடுவார் அல்லது சாட்சிகளிடம் குறுக்கீடு செய்வார் என்ற நிலை இருக்கையில் மட்டுமே கைது செய்யலாம் என்றாரவர்.

ஷாபி இவற்றைச் செய்வார் என்று எம்எசிசிகூட கூறவில்லை. ஆகவே, அவரைக் கைது செய்வதற்கான சட்ட அடிப்படை என்ன என்று சுரேந்திரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுள்ளார்.