பட்டாசு தடைக்கு நடுவேயும், மாசு பல மடங்கு அதிகரிப்பு.. அபாய கட்டத்தில் டெல்லி சுற்றுச்சூழல்!

டெல்லி: தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பின் டெல்லியின் சுற்றுச்சுழல் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி தற்போது அபாயக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் நேற்று இரவில் நடத்தப்பட்ட சோதனையில் காற்றில் மிகவும் அதிக அளவில் மாசு கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இருந்ததிலேயே மிகவும் அதிக அளவு எனக் கூறப்படுகிறது. டெல்லியில் வெடி வெடிக்க உச்ச நீதி மன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பின்பும் கூட காற்று இந்த அளவுக்கு மாசு அடைந்துள்ளதால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் வெடிகளுக்கு தடை

டெல்லியில் கடந்த சில மாதங்களாக மோசமான சுற்றுச்சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக பலருக்கும் சுவாசக் கோளாறு, சைனஸ் என நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கின்றன. இதையடுத்து தீபாவளி நாட்களில் டெல்லியின் சுற்றுச்சுழல் இன்னும் அதிக அளவில் மாசுபட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதையடுத்து இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் வெடி வெடிக்கவும், வாங்கும் தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதி மன்றம்.

தடையை மீறி வெடி

இந்தச் சட்டத்தை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் காலையில் இருந்து மாலை வரை பெரும்பாலான இடங்களில் இந்தச் சட்டம் மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிறைய இடங்களில் மக்கள் வெடி வெடிக்காமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் டெல்லியின் சில பகுதிகளில் வெடி வெடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் மக்கள் வெடி வெடித்து இருக்கிறார்கள்.

டெல்லியில் மோசமான சூழல்

டெல்லியின் அருகாமை பகுதிகளான நொய்டா, பரிதாபாத் போன்ற இடங்களிலும் அதிக அளவில் வெடி வெடிக்கப் பட்டிருக்கிறது. இதையடுத்து டெல்லியின் சுற்றுச்சுழல் மிகவும் மோசம் அடைந்துள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் இரவில் காற்றின் மாசு 350 யூனிட்டுகளுக்கும் அதிகமாக இருந்திருக்கிறது. சில இடங்களில் இந்த அளவு 450 யூனிட்டுகளை தொட்டிருக்கிறது. டெல்லியில் ஒரே நாளில் 10 மடங்கு அளவிற்கு மாசு அதிகம் ஆகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது டெல்லியின் சுற்றுச்சுழலுக்கு மிகவும் மோசமான காலகட்டம் எனக் கூறப்படுகிறது.

டெல்லி விரைவில் சீரடையும்

இந்த நிலை இன்னும் 48 மணி நேரங்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பக்கத்து மாநிலங்களில் நடக்கும் சுற்றுச்சுழல் மாற்றம் காரணமாக டெல்லியின் சுற்றுச்சுழல் விரைவில் சரியாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவரை டெல்லி மக்களுக்கு இந்த காற்று மாசு காரணமாக சிறிய அளவிலான உடல் உபாதைகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: