பூகிஸ் சமூகத்தை கடற்கொள்ளைக்காரர்கள் என்று கூறவில்லை, மகாதிர்

 

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஹரப்பான் கொள்ளைக்காரர் ஆட்சி எதிர்ப்பு பேரணியில் தாம் பூகிஸ் சமூகத்தை அவமதித்து விட்டதாக கூறப்படுவதை மகாதிர் மறுத்துள்ளார்.

நேற்றிரவு, அலோர் செதாரில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட செராமாவில் பேசிய மகாதிர் தாம் கூறியிருந்த கருத்து “பணத்தைத் திருடும் திருடர்களை நோக்கி கூறபட்டதாகும்” என்று வலியுறுத்தினார்.

“நான் ஒட்டுமொத்த பூகிஸ் சமூகத்தையும் அவமதிக்கவில்லை. அவர்களிடையே திருடர்களும் இருக்கிறார்கள்”, என்றாரவர்.

மேற்கு மலேசியாவிலிருக்கும் பூகிஸ் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று கூறிகொள்ளும் ஒரு தரப்பினர் மகாதிர் அவர் கூறியிருந்ததைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிபு கோர வேண்டும். இல்லையேல், அவருக்கு எதிராக நாடுதழுவிய அளவில் போலீஸ் புகார் செய்யப்படும் என்று மிரட்டியுள்ளனர்.

இதுதான் நஜிப் பின்பற்றம் வழி. எதிரணியினர் அவருக்கு எதிராக எதுவும் கூறினால், அவர் மக்களைத் தூண்டிவிட்டு போலீஸ் புகார் செய்ய வைக்கிறார் என்றார் மகாதிர்.