ஹரபான் பதிவை ஆர்ஓஎஸ் இழுத்தடிக்கிறதே: மகாதிர் ஆதங்கம்

பக்கத்தான்  ஹரபான்   அதன்   நான்கு   கட்சிகளையும்    அதிகாரத்துவ  கூட்டணியாக   பதிவு     செய்ய  சங்கப்  பதிவக (ஆர்ஓஎஸ்) த்திடம்   மனு   செய்துள்ளது.   ஆனால்,  ஆர்ஓஎஸ்   அதைக்   கண்டுக்கொள்ளாதிருக்கிறது   என  முன்னாள்  பிர்தமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்    குறைப்பட்டுக்  கொண்டார்.

ஹரபான்   அதன்  மனுவைத்   தாக்கல்     செய்து    நான்கு   மாதங்களாயிற்று. ஆர்ஓஎஸ்  இதுவரை   பதிலளிக்கவில்லை,  இது   “வழக்கத்துகு   மாறானது”  என்று  மகாதிர்   கூறினார்.

ஹரபான்    சின்னத்தில்   “பக்கத்தான்”   என்ற   சொல்லும்   இணைக்கப்பட    வேண்டும்    என்று   ஆர்ஓஎஸ்   கூறியது   அதற்கும்   ஹரபான்  உடன்பட்டு   அந்த  மாற்றத்தைச்  செய்தது.  அதன்  பின்னரும்   அதனிடமிருந்து   எந்தப்  பதிலுமில்லை.

“நாங்களும்    கேட்டுப்பார்த்து   விட்டோம்.  அவர்களுக்குக்  கண்பார்வை  இல்லையா,  காது    கேட்கவில்லையா,   தெரியவில்லை”,  என  இன்று   அலோர்   ஸ்டாரில்    செய்தியாளர்    கூட்டமொன்றில்    மகாதிர்     கூறினார்.

“நாங்கள்   பதிவுசெய்துகொள்ள    விரும்புகிறோம்.  அவர்கள்   ஹரபானைக்  கண்டு    அஞ்சுகிறார்கள்”,  என்றார்.

ஆர்ஓஎஸ்   பதிவைத்   தாமதப்படுத்துவதே    ஹரபான்   கூட்டணியைக்   கண்டு   பிஎன்   அஞ்சுகிறது    என்பதற்கு     அறிகுறியாகும்   என்று  மகாதிர்    கூறினார்.