மெர்சல் படத்தில் இருந்து எந்த காட்சியும் நீக்கப்படாது.! தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி

சென்னை, விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடி கொண்டுள்ளது.  வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தி வருகிறது.

இந்த  படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர்.

மெர்சல் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் டுவிட்டர் வழியே ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இதனை எதிர்க்கும் வகையில் பாரதீய ஜனதாவினர் பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தினை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை நீக்க வேண்டுமெனில் அதற்கு தயாராகவே இருக்கிறோம்.  திரைப்படத்தினை யாரையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கவில்லை. என கூறப்ப்பட்டது.

இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமா ருக்மணி கூறியதாவது:

மெர்சல் படத்தில் இருந்து எந்த காட்சியும் நீக்கப்படாது. என கூறியுள்ளார்.

அவர் இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-athirvu.com