தஞ்சோங் பூங்கா நிலச்சரிவில் பலியான அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன

தஞ்சோங் பூங்கா கட்டுபடி-விலை   வீடமைப்புத்  திட்டத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மாண்ட 11 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

இன்று காலை, இறுதியாக மீட்கப்பட்ட இரு உடல்கள் – முகமட் மோனிருல் இஸ்லாம் என்ற வங்காளதேச தொழிலாளியும், யுவான் கொவ்க் வெர்ன், 27, எனும் மலேசியரும் ஆவர்.

மோனிருல் உடலை அகற்றும் செயல் எளிய சூழலின் காரணமாக, நீண்ட நேரம் எடுக்கவில்லை என்று மாநில அரசின் செயலாளர் ஃபாரிஷான் டாருஸ் கூறினார்.

எனினும், யுவானின் உடல் இரும்புக் கம்பிகளுக்கிடையில் சிக்கிக்கொண்டதால், அதனை நீக்க சிறிது நேரம் எடுத்தது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்தபோது, அம்மலைப்பகுதியில் இருந்த கட்டுமானத் தளத்தில் 11 பேர் வேலை செய்துவந்ததாகத் தெரிகிறது.

தனியாருக்குச் சொந்தமான அவ்வீடமைப்புத் திட்டத்தில், 50 மாடி கட்டடம் எழுப்பப்படவிருந்தது. அதன் முதல் கட்டமாக நிலத்தடி கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கான வேலை நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது