எம்எச்370 தென்சீனக் கடலில்தான் கிடக்கிறதாம்: லூமுட் எம்பி திட்டவட்டம்

இன்று   மக்களவையில்    முகம்மட்   இம்ரான்     அப்ட்  ஹமிட்,  மலேசிய   விமான   நிறுவனத்தின்  எம்எச்370,  தென்சீனக்  கடலில்தான்   விழுந்து  நொறுங்கியது   என்று  கூறி  ஒரு  பரபரப்பை   உண்டாக்கினார்.

பணி ஓய்வுபெற்ற   கடல்படைத்  தலைவரான   முகம்மட்  இம்ரான்,   கடல்படை  மற்றும்   ரேடார்   தொழில்நுட்பத்தில்   தமக்குள்ள   அனுபவத்தை   வைத்து   இம்முடிவுக்கு   வந்ததாகக்  கூறினார்.

“ஒரு   விமானம்   ரேடாரிலிருந்து   காணாமல்   போவதற்கு    இரண்டு   காரணங்கள்தான்   இருக்க   முடியும். ஒன்று   விமானம்  வெடித்திருக்க   வேண்டும்   அல்லது   கடலில்    விழுந்திருக்க   வேண்டும்.

“விமானம்  இந்தியப்   பெருங்கடலை    நோக்கித்    திரும்பியதற்குக்  காணொளி   ஆதாரம்  இல்லை.  விமானம்   திசை   மாறியதைக்  காண்பிக்கும்   காணொளி  இருந்தால்   அரசாங்கம்   காண்பிக்கட்டும்.

“விமானம்   தென்சீனக்   கடலில்தான்  விழுந்தது   என்று   நான்  திண்ணமாகக்  கூறுவேன்.  அவர்கள்   ஏன்   அங்கு   தேடவில்லை?  அவர்களுடைய   கருத்து   தவறு   என்பேன்.  அவர்கள்    மூன்றாண்டுகள்  என்ன   தேடியும்   எதுவும்   கிடைக்கவில்லை”,  என்றார்.

தென்சீனக் கடலில்   தேடல்  பணி   தொடர    வேண்டும்    என்றும்   அதில்   மலேசியர்கள்தாம்   ஈடுபட     வேண்டும்    என்றும்   அவர்   வலியுறுத்தினார்.