10 புதிய சீனப் பள்ளிகளுக்கு புத்ரா ஜெயா பச்சை விளக்கு

புத்ரா  ஜெயா   10   புதிய  சீனத்   தொடக்கநிலைப்  பள்ளிகளைக்   கட்டுவதற்கு  அனுமதி   அளித்துள்ளது.   அதேவேளை   இப்போதுள்ள  ஆறு   பள்ளிகள்   இடமாற்றம்   செய்யப்படும்.

புதிய  பள்ளிகளுக்குத்   தேவை   இருப்பதாக   சிறப்பாகக்  கூட்டப்பட்டிருந்த  செய்தியாளர்   கூட்டமொன்றில்     கல்வி   அமைச்சர்     மஹாட்சிர்   காலிட்   கூறினார்.

அக்கூட்டத்தில்    மசீச    தலைவர்    லியோ   தியோங்   லாய்,   துணைத்  தலைவர்    வீ   கா   சியோங்,   கெராக்கான்     தலைவர்    மா   சியு    கியோங்,   கெராக்கான்  தலைமைச்    செயலாளர்  லியாங்   டெக்   மெங்   முதலானோரும்   கலந்து   கொண்டனர்.

பள்ளிகள்   அனைத்தும்   புகழ்பெற்ற   சீனப்   பெருமக்களின்  பெயர்களைக்  கொண்டிருக்கும்.    ஒன்றே   ஒன்று  மட்டும்    ஒரு  நிறுவனத்தின்   பெயரில்   அமைந்திருக்கும். அப்பத்துப்  பள்ளிகள்   வருமாறு:

SJK (C) Kuek Ho Yao (Mount Austin, Johor Bahru)
SJK (C) Sim Mo Yu (Pasir Gudang, Johor Bahru)
SJK (C) Tun HS Lee (Ulu Tiram, Johor Bahru)
SJK (C) Tan Kah Kee (Iskandar Puteri, Nusajaya)
SJK (C) Cheah Fah (Iskandar Puteri, Nusajaya)
SJK (C) Lee Loy Seng (Bandar Seri Coalfields, Sungai Buloh)
SJK (C) Sunsuria (Sunsuria City, Sepang)
SJK (C) Ong Yoke Lin (Gamuda Cove, Cyberjaya)
SJK (C) Lim Chong Eu (Eco Grandeur, Puncak Alam)
SJK (C) Too Joon Hing (Dengkil, Selangor).