டிஏபி: சிஇசி தேர்தலில் போட்டியிடும் தகுதி கிட் சியாங்குக்கும் குவான் எங்குக்கும் உண்டு

டிஎபி   மூத்த   தலைவர்   லிம்    கிட்  சியாங்கும்    தலைமைச்   செயலாளர்   லிம்   குவான்   எங்கும்    மத்திய    செயலவைக்கான   மறுதேர்தலில்   போட்டியிடாமல்   ஒதுங்கிக்கொள்ள     வேண்டிய   அவசியம்   இல்லை.

“இது   சுதந்திர   நாடு.  அவர்கள்   என்ன   வேண்டுமானாலும்   சொல்லட்டும்.  எங்களைப்  பொருத்தவரை    அவ்விருவருக்கும்   சிஇசி   தேர்தலில்   போட்டியிட    தகுதியுண்டு”,  என    டிஏபி  அமைப்புச்    செயலாளர்    அந்தோனி  லோக்   இன்று     கோலாலும்பூரில்  கட்சித்    தலைமையகத்தில்   கூறினார்.

டிஏபி   முன்னாள்   உறுப்பினர்கள்    சிலர்,   குவான்  எங்கும்   கிட்   சியாங்கும்   நவம்பர்   12   நடைபெறவுள்ள   சிஇசி   மறுதேர்தலில்   போட்டியிடக்   கூடாது    என்று    கோரிக்கை  விடுத்திருப்பது    குறித்து    அவர்   கருத்துரைத்தார்.