காஷ்மீர் சிரியாவாக மாறாமல் இருக்கவே முன்னுரிமை சிறப்பு அதிகாரி தினேஷ்வர் சர்மா தகவல்

புதுடெல்லி, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு சிறப்பு அதிகாரியாக புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் தினேஷ்வர் சர்மாவை மத்திய அரசு நியமித்து இருக்கிறது. அவருக்கு மத்திய மந்திரிக்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. அவர் காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். காஷ்மீர் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நியாயமான அபிலாஷைகளை அறிந்துகொள்வதற்கும் முயற்சிப்பார். பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி தற்போது, பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ள அதிகாரி தினேஷ்வர் சர்மா பேசுகையில் காஷ்மீர் சிரியாவாக மாறாமல் இருப்பதற்கே முன்னுரிமை என குறிப்பிட்டு உள்ளார். காஷ்மீரில் தன்னுடைய திட்டமானது வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவது என்பதே, மாநிலத்தில் விரைவில் அமைதியை திரும்ப செய்ய ரிச்சா ஓட்டுநர் உள்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என குறிப்பிட்டு உள்ளார் தினேஷ்வர் சர்மா.

காஷ்மீர் விவகாரத்தில் சில நேரங்கள் நான் மிகவும் வலியை உணர்ந்து உள்ளேன், சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு உள்ளேன். விரைவில் அங்கு அனைத்து தரப்பில் இருந்தும் வன்முறையானது முடிவுக்கு வரவேண்டும் என்பதை பார்க்கவே நான் விரும்புகின்றேன். காஷ்மீரில் இஸ்லாமிய அரசை அமைப்போம் என இளைஞர்கள் ஜாகிர் முசா (காஷ்மீர் அல் கொய்தா தலைவன்), பர்கான் வானி (கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர்) கூறிய போது அவர்களை நோக்கிய கவனம் திரும்பியது. காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்களின் பயங்கரவாதமையமாதலை நோக்கிய நகர்வானது, காஷ்மீர் சமூதாயத்தையே முடிவுக்கு கொண்டுவரும்.

காஷ்மீர் மக்களை பற்றி நான் மிகவும் கவலையடைந்து உள்ளேன். வன்முறை சம்பவம் தொடர்ந்தால் நிலையானது சிரியா, ஏமன் மற்றும் லிபியா போன்ற நிலைக்கு திரும்பலாம். மக்கள் பல்வேறு குழுக்களுக்கு எதிராக போராட வேண்டிய நிலை தொடங்கும். காஷ்மீர் எதிர்க்கொண்டு உள்ள பாதிப்பை பங்களிப்புடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டியது நாம் எல்லோருக்கும் முக்கியமானது. காஷ்மீர் இளைஞர்கள் அவர்களுடைய எதிர்காலம் மற்றும் சுதந்திரம், இஸ்லாமிய அரசு என ஒட்டுமொத்த காஷ்மீரிகளின் எதிர்காலத்தையும் அழித்து வருகிறார்கள், இதனை அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக சிரியா, பாகிஸ்தான், லிபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. உலகில் அவை மிகவும் வன்முறை பகுதியாகி உள்ளது. எனவே இதுபோன்ற நிலையானது இந்தியாவில் நடக்க கூடாது என்பதேயே நான் விரும்புகின்றேன் என கூறிஉள்ளார் தினேஷ்வர் சர்மா.

“காஷ்மீரில் எல்லா தரப்புடனும் பேச்சுவார்த்தையை நடத்த நான் தயாராக உள்ளேன். மாணவர்கள், இளைஞர்கள் என நல்ல எண்ணம் கொண்ட யாரிடமும் நான் பேச முடியும், அவர்களுடைய கருத்துக்களை பரிசீலனை செய்ய முடியும்,” எனவும் கூறிஉள்ளார்.

-dailythanthi.com

TAGS: