நஜிப்பின் உரையின் முடிவில், “கொள்ளைக்கார ஆட்சி” கூக்குரல் வெடித்தது

 

பட்ஜெட் 2018: பிரதமர் நஜிப் அவரது 2018 ஆம் ஆண்டுக்கான இரண்டரை மணி நேர பட்ஜெட் உரையை முடித்ததும். நாடாளுமன்ற எதிரணி உறுப்பினர்கள் “கொள்ளைக்கார ஆட்சி” என்று முழக்கமிட்டனர்.

“14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு வெற்றியைக் கொண்டுவர நமது இறுதிச் சொட்டு இரத்தம் வரையில்”, என்று பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆரவாரத்துக்கிடையில் பிரதமர் இடிமுழங்கினார்.

அதற்கு எதிர்வினையாற்றிய எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் “கொள்ளைக்கார ஆட்சி” என்று கூக்குரலிட்டனர்.

எதிரணியினர் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு மற்றும் குடைந்தபட்சம் சம்பளம் ரிம1,500 கோரும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளைப் பிடித்து உயர்த்திக் காட்டினர்.
பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சடிக்கப்பட்ட 2018 பட்ஜெட் நகல்களைக் காட்டினார். பாஸ் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவில்லை.

நஜிப் எவ்விதக் குழப்பத்தையும் வெளிக்காட்டாமல் புன்னகையோடு அவரது இருக்கையில் அமர்ந்தார்.