பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம் – அமெரிக்கா

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தெற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவு குறித்து பேசிய டொனால்டு டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்தார். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் அந்த நாட்டின் ஸ்திரத்தன்மைக்கே அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கையை விடுத்தார்.

தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியா – அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தியது.

இப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம் என அமெரிக்கா எச்சரித்து உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக வலிமையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் அமெரிக்கா தன்னுடைய நோக்கத்தை மாற்று வழியில் அடைய தன்னுடைய திட்டத்தை மாற்றிக்கொள்ளும் என டில்லர்சன் நேரடியாகவே பாகிஸ்தானிடம் தெரிவித்து உள்ளார் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

-dailythanthi.com