மக்களவையில் பாரிசான் சின்னம்: நஜிப் தப்பித்து விட்டார்

 

நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து பிரதமர் நஜிப் ஆற்றிய உரையின் நேரடி ஒலிபரப்பின் போது பாரிசான் நேசனல் சின்னம் காட்டப்பட்டது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல என்று மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கூறினார்.

அந்தத் தவறு சம்பந்தமாக அளிக்கப்பட்ட விளக்கத்தையும் மன்னிப்பு கேட்கப்பட்டதையும் தாம் ஏற்றுக்கொண்டதாக பண்டிகார் மேலும் கூறினார்.

இத்தகவல் அடங்கிய பண்டிகாரின் செய்தியை மக்களவையின் துணைத் தலைவர் இஸ்மாயில் முகமட் சைட் வாசித்தார்.

இச்சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அம்மாதிரியான தவறை எதிர்காலத்தில் மீண்டும் செய்யக்கூடாது என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.