குவான் எங் : பினாங்கு மாநில அரசு ஊழியர்கள் இவ்வாண்டு 2000 ரிங்கிட் போனஸ் பெறுவர்

பினாங்கு அரசாங்கம், அடுத்த மாதம் ‘நன்கு செயல்படும் மற்றும் ஒழுக்கநெறி மிக்க’ அனைத்து பொது ஊழியர்களுக்கும் 2,000 ரிங்கிட் போனசும்; பிற பொது ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் போனசும் வழங்க திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, பினாங்கு மாநிலத்திற்கான 1.21 பில்லியன் ரிங்கிட் வரவு செலவு திட்டத்தை லிம் தாக்கல் செய்தார். 748.5 மில்லியன் ரிங்கிட் அதிகபட்ச பற்றாக்குறை, இது 2011-க்குப் பின்னர், மாநிலத்திற்குத் தொடர்ச்சியான ஏழாவது பற்றாக்குறையான பட்ஜெட்.

கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 667.10 மில்லியன் ரிங்கிட் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

2018 –ஆண்டின், மாநில வரவுசெலவுத் திட்டம் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

“கடந்த 10 ஆண்டுகளில், எங்கள் வெற்றி 2008- ல் இருந்து 2015- ல் வரை 578 மில்லியன் ரிங்கிட் உபரி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எங்கள் கடன் 90% குறைக்கப்பட்டுள்ளது,”  என்று லிம் குறிப்பட்டார்.

“2008-க்கு முன்பான 50 ஆண்டுகால ஆட்சியைவிட, 9 ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் தலைமையில், அதிகம் நிரூபிக்கப்பட்டுள்ளதை இது தெளிவாகக் காட்டுகிறது,” என்றும் லிம் தெரிவித்தார்.