மகாதிரின் மன்னிப்பு கோருதலை ஆண்டவன் ஏற்றுக்கொள்ளலாம், நான் மாட்டேன், நசிர் ஹசிம்

1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓப்பராசி லாலாங் நடவடிக்கைக்காக டாக்டர் மகாதிர் மன்னிபுக் கோரினால், அது மனப்பூர்வமானதாக இருக்காது என்று மலேசிய சோசலிசக் கட்சியின் தலைவர் டாக்டர் முகம்ட் நசிர் ஹசிம் கூறுகிறார்.

நான் ஒரு சாதாரண மனிதன். மகாதிர் மன்னிப்பு கோரினாலும், நான் அதை என் மனதில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை, ஆண்டவன் அதை ஏற்றுக்கொள்ளக்கூடும் என்று நசிர் கூறினார்.

அப்படியே அவர் மன்னிப்பு கோரினாலும், அது ஓர் அரசியல் முடிவாகத்தான் இருக்கும். அது அவரது உள்ளத்திலிருந்து வரவில்லை என்று ஓப்பராசி லாலாங் நடவடிக்கையின் கீழ் 15 மாதங்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த நசிர் மலேசியாகினியிடம் கூறினார்.

நேற்று, 100க்கு மேற்பட்ட ஆர்வலர்கள், செய்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை ஓப்பராசி லாலாங் நடவடிக்கையின் போது தடுத்து வைத்ததற்காக சாட்டப்படும் குற்றத்தை ஏற்றுக்கொள்ளவதாக மகாதிர் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய நசிர் இவ்வாறு கூறினார்.

ஆனால், மகாதிர் மன்னிப்பு கோரவில்லை. அந்தக் கடுமையான நடவடிக்கை அவரது முடிவு அல்ல என்று அவர் கூறினார்.

ஓப்பராசி லாலாங் நடந்தது. அது அவரது ஆதரவுடந்தான் நடந்திருக்க வேண்டும். யார் அதிகாரத்தில் இருந்தது – அவரா அல்லது போலீசாரா என்று நசிர் வினவினார்.

அவர் இப்போது தப்பிக்கப்பார்கிறார் என்று நசிர் மேலும் கூறினார்.