யாரும் வேண்டாம்.. சாக்கடை அடைப்பை சரிசெய்ய களமிறங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர், ஆர்கேநகர்ப் பகுதிகளில் களத்தில் மழைநீர், கழிவுநீர் முறையாக வெளியேறுவதற்கு சாக்கடை அடைப்புகளைச் நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கி சரிசெய்தனர்.

வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு தொடக்கமே அமர்க்களமாக இருக்கிறது. பருவமழை தொடங்கி ஒரு வாரத்திலேயே கொட்டித் தீர்க்கும் அடை மழையால் சென்னை நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக கட்சியளிக்கின்றன. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அச்சத்துடனே பொழுதை கழிக்கின்றனர்.

இந்நிலையில் சாக்கடை அடைப்பு, வடிகால்வாய்கள் அடைப்பு காரணமாக தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துவிட்டு மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்ய வருவார்களா என்று காத்திருக்கின்றனர். உள்ளாட்சிக்கென பிரதிநிதிகளும் இல்லாததால் மக்கள் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.

ஒரு சில பகுதிகளில் சில கட்சியின் பிரதிநிதிகள் மக்களிடம் இருக்கும் அன்பு காரணமாக தாங்களே முயற்சி எடுத்து வடிகால்வாய்களை அகற்றி வருகின்றனர். இதே போன்று நாம் தமிழர் கட்சியினர் சாக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை நீக்கும் பணியில் களத்தில் இறங்கியுள்ளனர்.

சோழிங்கநல்லூர், ஆர்கேநகர்ப் பகுதிகளில் களத்தில் மழைநீர், கழிவுநீர் முறையாக வெளியேறுவதற்கு சாக்கடை அடைப்புகளை கைகளாலேயே செரிசெய்ததோடு, நீர் ஓடத்தடையாக இருக்கும் தடுப்புகளை கடப்பாறைகளைக் கொண்டு சரி செய்தனர். இதே போன்று அஸ்தினாபுரம் ஏரிபகுதியில் கடந்த 2 நாளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு ரொட்டி, தண்ணீர் உள்ளிட்டவற்றை பல்லாவரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டனர்.

மேலும் கடுமையான மழையிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு நாம் தமிழர் இயக்கத்தினர் தங்களால் இயன்றவற்றை விநியோகித்து மக்களின் சிரமத்தில் பங்கெடுத்து வருகின்றனர். எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் மக்கள் பணியாற்றும் நாம் தமிழர் கட்சியினரின் செயல் பாராட்டிற்குரியதே.

tamil.oneindia.com

TAGS: