சென்னைக்கு வரவுள்ள பேராபத்து..! தடுக்க நடவடிக்கை எடுக்குமா தமிழகரசு..!

சென்னையில் கடந்த 2015ல் வந்த வர்தா புயல் ஒரு காட்டு காட்டி விட்டு சென்றது. அதன் பாதிப்பில் இருந்தே இன்னும் மக்கள் மீளவில்லை. அதற்குள் இந்த ஆண்டும் அதே போன்று ஒரு பேய் மழை பெய்து சென்னை மக்களை ஆட்டி படைத்து வருகிறது.

வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து கொண்டு உள்ளனர். 2015ம் ஆண்டின் அனுபவத்தை வைத்தே மத்திய, மாநில அரசுகள் சுதாரித்து கொண்டிருக்க வேண்டும்.

போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் அரசுகள் எல்லாம் தூங்கி கொண்டுதான் உள்ளன.

மழை வெள்ளம் வடிய, அதனை தேக்கி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் மூழ்கியபோதும் கூட அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்கள்.

இன்னும் கனமழை தொடர உள்ளது. டிசம்பரில் பேராபத்து ஒன்று உள்ளது. இப்போதே இப்படி என்றால் எப்படித்தான் மக்களை அரசு காப்பாற்றப்போகிறதோ என தெரியவில்லை.

அதுமட்டும் அல்லாமல் அடுத்த 2 ஆண்டுகள் சென்னையில் இதை விட பயங்கர மழை வரப்போவதாக வானிலை ஆய்வாளர்கள் பீதியை கிளப்புகிறார்கள்.

இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் அந்த மழையை எல்லாம் சென்னைவாசிகளால் நிச்சயம் தாங்கி கொள்ள முடியாது. சென்னையில் பேரழிவு நிச்சயம் ஏற்படும்.

அரசு விழித்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே அந்த அழிவில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். இல்லை என்றால் சென்னை இருந்த இடம் இல்லாமல் போய் விடும்.

இதற்கு அரசை மட்டும் குறை கூறி பயன் இல்லை. மக்களும் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டி கொள்கிறார்கள். அந்த நீர் எல்லாம் எங்கே போகும், குடியிருப்புகளைதான் சூழ்ந்து கொள்ளும்.

எனவே இனிவரும் காலங்களிலாவது நீர்நிலைகளை ஆக்கிமிக்க முடியாதபடி வலுவான சட்டம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சென்னை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே கூட காப்பாற்ற முடியாது.

-athirvu.com

TAGS: