பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறானது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தல்

புதுடெல்லி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செய்த பெரிய தவறை ஒப்புக்கொண்டுவிட்டு, பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்க மோடி முயற்சிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:- “ பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதார நிலையை சுட்டிக்காட்டுபவர்கள் கூறியதைவிட சமூகத்தில் பலவீனமாக இருந்தவர்களையும் தொழில்களையும் அதிகம் பாதித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்வைத்து செய்த அரசியலுக்கான தருணம் முடிந்துவிட்டதாக நான் உறுதியாக நம்புகிறேன். பிரதமர் மோடி, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, பொருளாதாரத்தை அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் கட்டமைக்க வேண்டிய தருணம் இதுவாகும். பொருளாதார கொள்கைகளில் நிலையான சுமூகமான தேசம் ஒன்ற புகழுக்கு  இழுக்கு ஏற்படுவதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணம் ஆகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட நாளான  நவம்பர் 8 ஆம் தேதியை, கருப்பு தின நாளாக அனுசரிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

-dailythanthi.com

TAGS: