2018-ல் வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருக்கும் , நிபுணர்கள் ஆருடம்

2008-ல், வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பட்டதாரிகள் மற்றும் வேலை அனுபவமும் இல்லாதவர்களுக்குத் திருப்திகரமான ஊதியத்தில் வேலை கிடைப்பது சவாலாக இருக்குமென வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

புதிய பதவிகளை வழங்குவதில் நிறுவனங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். குறைந்த ஊதிய வேலைகளைப் பெற அல்லது ‘உபர்’ ஓட்டுனர்களாக அல்லது வாகனங்களில் உணவு வணிகம் செய்ய, பட்டதாரிகள் கட்டாயப்படுத்தப்படுவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், தகவல் தொழில்நுட்பத் திறமை கொண்ட தொழிலாளர்கள் (ஐ.டி.) இன்னும் தேவைபடுகிறது.

வேலை காப்புறுதி திட்டம் (SIP) மற்றும் தனியார் துறை தொழிலாளர்களுக்கு 90 நாள் மகப்பேறு விடுப்பு போன்ற கூடுதல் செலவின சுமைகளைக் கொடுப்பதால், முதலாளிகள் புதிய வேலைவாய்ப்புகளை வழங்க முன்வரமாட்டார்கள் என்று, மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (எம்.இ.ஃப்.) இயக்குநர் ஷம்சுடின் பர்தான் கூறினார்.

“இந்தக் கூடுதல் செலவுகள் காரணமாக, அடுத்த ஆண்டு பல நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படுவதையும் எதிர்பார்க்கலாம்,” என்று அவர் ஃப்.எம்.தி.-யிடம் கூறினார்.

இருப்பினும், அடுத்த ஆண்டு 60 வயதை எட்டும் 100,000 தொழிலாளர்களின் இடங்களை நிரப்ப வேண்டியுள்ளதால், பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படலாம் என்று அவர் கூறினார்.

“இவர்கள் 2013-ல் ஓய்வு பெறவேண்டிய முதல் குழுவினர், ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டதால், 2018-ல் அவர்கள் ஓய்வு பெறுவார்கள். இதன்வழி சுமார் 100,000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும்.”

“அடுத்த ஆண்டு முதல், வேலை மாற்று திட்டத்தில் இருப்பவர்களை, 2 முறை யோசிக்குமாறு நான் ஆலோசனை கூற விரும்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.

பல சர்வதேசப் பொருளாதாரப் புத்தகங்களை எழுதியுள்ள, பேராசிரியர் ஹூ கெ பிங், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) நல்ல நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும்,  புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று இது அர்த்தப்படாது என்று கூறியுள்ளார்.

“செம்பனை எண்ணெய் மற்றும் தளவாடங்கள் ஏற்றுமதி சந்தை நல்ல நிலையில் இருக்கிறது, ஆனால், உள்நாட்டு சந்தையில் இல்லை.”

வங்கி துறை மற்றும் சில தனியார் துறைகள் பணியாளர்களைக் குறைக்கும் வாய்ப்புள்ளது என்று அவர் கணித்துள்ளார்.

“பல அமெரிக்க நிறுவனங்கள் , அவர்களுக்கு ஆதரவான ஒரு வரி சீர்திருத்தம் செய்யப்படுவதைத் தொடர்ந்து, திரும்பிச் செல்லும் வாய்ப்புள்ளதால், மின்னணு துறையும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

கட்டுமானத் துறை மெதுவாக வளர்ச்சியடையும் என்றும், போக்குவரத்து, சிமென்ட் மற்றும் இரும்பு உற்பத்தி போன்ற கட்டுமானத்துடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 100 துறைகளை இது பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம், 2018 பட்ஜெட் தாக்கலின் போது, ‘1மலேசிய ஃபூட் த்ரேக்’ (FT1M) திட்டத்தின் கீழ் 1,000 உணவு சிறுதொழில் நிபுணர்களுக்கு 120 மில்லியன் ரிங்கிட்டை எளிய கடனாக கொடுக்கவுள்ளதாக பிரதமர் நஜிப் அறிவித்தார்.

பல இளைஞர்கள் ஆன்லைனில் விநியோகம் செய்வார்கள் என்றும், அதிகமான மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள் என்றும் ஹூ மேலும் கூறினார்.