பண மதிப்பிழப்பு: `மோதியின் துணிச்சலால் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் இந்தியா’

(இந்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, நவம்பர் 8-ம் தேதி ஓராண்டாகிறது. அந்த நடவடிக்கை எற்படுத்திய தாக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை இந்த வாரம் வெளியிடுகிறோம். அதன் இரண்டாம் பகுதி இது. இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்)

உலகின் எந்தவொரு தலைவரும் எடுக்கத் துணியாத ஒருகொள்கை முடிவை எடுக்கவேண்டுமானால் அதற்கென தனியான துணிச்சல் வேண்டும். அதீத துணிச்சலுடன், தான் எடுத்த முடிவில் சிறிதும் மனம் தளராமல், மாற்றுக் கட்சியினரின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் அந்தக் கொள்கை முடிவை எடுத்த ஒரே தலைவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிதான். அவர் எடுத்த அந்தக் கொள்கை முடிவுதான் Demonitisation என்று அழைக்கப்படும் பண மதிப்பிழப்பு ஆகும்.

திடீர் அறிவிப்பு

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி, இரவு 8.00 மணிக்கு ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 செல்லாது என்று அறிவிக்கின்றார். அதற்கான காரணமாக அவர் வைத்த வாதம் நாட்டில் தற்போது புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிப்பது; லஞ்சத்தை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தை செம்மைப்படுத்துவது; மற்றும் தீவிரவாதத்திற்கு துணைபோகும் போலி ரூபாயை வேரெடுப்பது.

இந்த அறிவிப்பின் மூலம் இந்தத் தலைமுறை, “பண மதிப்பிழப்பு” என்ற ஒரு புதிய சொல்லாடலை முதல் முதலில் கேட்கிறது. இந்தக் கொள்கை முடிவு நடைமுறைக்கு வந்து இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது. பிரதமர் மோதி கண்ட இந்த மூன்று கனவுகளும் நிறைவேறினவா?

கருப்புப் பண ஒழிப்பு

கணக்கில் வராத வருமானத்தின் வகையில் ரூ. 29,213 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பினாமி பெயரில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1626 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மத்திய அரசின் நேரடி நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

4.7 லட்சம் வங்கிப் பரிமாணங்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த காரணத்தால் அந்தக் கணக்குகளை தொடங்கியவர்கள் மீது வருமான வரித்துறை குற்றவியல் நடவடிக்கைளை தொடங்கியுள்ளது. மேலும், 23.22 லட்சம் வங்கிக்கணக்குகளில் மொத்தம் ரூ. 3.68 லட்சம் கோடி சந்தேகத்திற்கிடமாக வரவு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இவ்வளவு கருப்புப் பணத்தையும் வைத்திருப்பவர்கள் நாட்டு மக்கள் தொகையில் 0.00011 சதவிகித்தனர் தான். ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களை செல்லாது என்ற ஒரே அறிவிப்பால் உயர் மதிப்பு கொண்ட ருபாய் நோட்டுகள் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்துள்ளது; அதாவது 6 லட்சம் கோடி எண்ணிக்கையிலான நோட்டுக்கள் இன்று புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

கள்ள நோட்டுக்கள் ஒழிப்பு – தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி

கருப்புப் பணத்தை ஒழிக்கும் ஒரு புறத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் உள்நாட்டு பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் முடிவு செய்திருந்தார்.

இதுவரை வேலை இல்லாத இளைஞர்கள் காஷ்மீர் மாநிலத்தில் போலீசார் மீது கற்களை வீச பாகிஸ்தான் தீவிரவாதிகள் பணம் கொடுத்துக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் இந்த பணம் கள்ளப்பணமாக பொருளாதாரத்தில் ஊடுருவி இருந்தது.

நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஒரே காரணத்தால், இந்த இளைஞர்களுக்கு கொடுக்கப் பணம் இல்லாமல் தீவிரவாதிகளின் கூண்டுகள் காலியாகிவிட்டது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இத்தகைய கல்லெறியும் செயல்கள் 75 சதவிகிதம் குறைந்துள்ளது.

மேலும், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிஷா, பிகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் கோலோச்சிய மாவோயிஸ்டு பயங்கரவாதம் 20 சதவிகிதம் குறைந்துள்ளது. 7.62 லட்சம் எண்ணிக்கையிலான கள்ளப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதே இதற்கு காரணம் என்பது மிகவும் ஆறுதல் தரும் விஷயம் ஆகும்.

தூய்மைப் படுத்தப்படும் இந்தியப் பொருளாதாரம் – ஊழலுக்கு வெட்டு

கருப்புப் பணம் மற்றும் கள்ளப்பணம் ஒழிக்கப்படும்பொழுது நாட்டின் பொருளாதாரம் தூய்மை பெரும். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் 2ஜி, காமன்வெல்த், நிலக்கரி, ஆதர்ஷ் குடியிருப்பு மற்றும் ஹெலிகாப்டர் கொள்முதல் முதலான ஊழல்களால் புரையோடியிருந்த பொருளாதாரத்தை தூய்மைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை மோதி உணர்ந்தே இருந்தார்.

அரசால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக 2.24 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த போலி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சுமார் 100 வங்கி கணக்குகளை வைத்திருந்ததையும், அதிலும் குறிப்பாக ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே 2134 வங்கி கணக்குகளில் தனது பணத்தை வைத்திருந்ததையும் அரசு கண்டுபிடித்துள்ளது.

பண மதிப்பிழப்பு காரணமாக எடுக்கப்பட்ட ஒரு நிறுவனம் ரூ. 18.23 கோடி ஒரு கணக்கில் வரவு வைத்திருந்ததையும், இந்தப் பணத்தையும் உடனடியாக அந்த நிறுவனம் வங்கியிலிருந்து எடுத்துவிட்டதையும் மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. ஆனால், அந்த நிறுவனத்தில் இதற்கு முன் இருந்த ரொக்கப் பணமே ரூ. 63.60 லட்சம் தான். மேலும், 35,000 போலி நிறுவனங்கள் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ. 17,000 கோடி பணத்தை 58,000 வங்கி கணக்குகளில் வரவு வைத்திருந்ததையும் அரசு கண்டுபிடித்துள்ளது.

இந்தப் போலி நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக, இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் சிறைவாசம் அனுபவிப்பார்கள் என்பது மட்டுமல்ல; இதன் காரணமாக ஊழலில் தழைக்கலாம் என்ற எண்ணப்போக்கு உள்ளவர்கள் களையெடுக்கப்பட்டு, பொருளாதாரம் தூய்மைப்படுத்தப்படும்.

மின்னணு (டிஜிட்டல்) பணப் பரிமாற்றம் – அனைவருக்கும் வரப்பிரசாதம்

பணப்புழக்கம் ரொக்கப் பணத்தை மட்டுமே நம்பி இல்லாமல், மின்னணுப் பணப்பரிமாற்றத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது. இப்பொழுதெல்லாம் இந்திய மக்கள் ரொக்கப் பணத்தை தங்கள் சட்டைப்பைகளிலோ அல்லது பெட்டிகளிலோ வைத்து எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் கையில் உள்ள அலைபேசியே ஒரு மினி வங்கியாக செயல்பட தொடங்கிவிட்டது.

அதோடு கூடவே, அவர்களின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட டெபிட் கார்டுகள் பயன்பாட்டில் வந்துவிட்டன. 2016ஆம் ஆண்டு 87 கோடியாக இருந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஒரே வருடத்தில் 138 கோடியைத் தொட்டுள்ளது.

டெபிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை ரூ. 35,413 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு வெறும் ரூ. 18,370 கோடியாகவே இருந்தது. அதாவது ஒரே வருடத்தில் இரண்டு மடங்குக்கும் அதிகமான பணப் பரிவர்த்தனை டெபிட் கார்டுகள் மூலம் நடந்துள்ளது.

மொபைல் போன் மூலம் நிகழ்ந்த பணப் பரிவர்த்தனை ரூ. 7,262 கோடியைத் தொட்டுள்ளது வியப்பாக உள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் வரை மொபைல் போன் என்பது பேசுவதற்கு மட்டுமே என்ற நிலை போய், தற்போது ஒவ்வொரு மொபைல் போனும் ஒரு மினி வங்கியாக செயல்படுகின்றது என்பதும், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிகளுக்கு நேரில் சென்றுதான் ஆகவேண்டும் என்பது நின்றுபோய், தற்போது தனது கையில் உள்ள மொபைல் போன் மூலமே தனது கணக்குப் பரிமாற்றங்களைச் செய்து கொள்ளலாம் என்பது பிரதமர் மோதியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றியாகும்.

அதிக வருவாய்; புதிய திட்டங்கள்

மொத்தமாகப் பார்த்தால் பண மதிப்பீட்டிழப்பு என்ற ஒரு நடவடிக்கை ரொக்கப் பணத்தை சந்தையில் இருந்து அகற்றி, வங்கிகளில் வரவு வைத்த காரணத்தால், வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. கடந்த ஒரு நிதியாண்டில் 84.21 லட்சம் புதிய வருமான வரி செலுத்துபவர்கள் 3.01 கோடி அளவுக்கு வருமான வரி தாக்குதலை டிஜிட்டல் முறையில் செய்துள்ளனர்.

இதன் காரணமாக நாட்டின் கஜானாவுக்கு வந்து சேர வேண்டிய வரியும் அதிகரிக்கும்; அப்பணத்தைக் கொண்டு புதிய நலத்திட்டங்களையும் மோதி அரசு வழங்க ஏதுவாகும்.

ரயில்வே துறை மூலம் புதிய ரயில்களை இயக்குவதற்கும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இருப்புப் பாதைகளை மின்மயமாக்கி ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் கனவுத் திட்டமான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி பாரத் மாலா என்ற பெயரில் நாடு முழுவதும் 34,800 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ. 5,35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாராக் கடன் காரணமாக நலிந்து போய்க் கொண்டிருக்கும் வங்கிகளை புனர்நிர்மாணம் செய்யும்பொருட்டு ரூ.2,11,000 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

கருப்புப் பணமற்ற பொருளாதாரம், பயங்கரவாதமற்ற அமைதியான பாரதம், மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களை தொய்வில்லாமல் சென்று சேர ஜன்தன் வங்கிக்கணக்கு – ஆதார் அட்டை – மொபைல் போன் பணப் பரிவர்த்தனை (JAM). வலிமையான பாரதம்; வளமான பாரதம். பிரதமர் மோடியின் தலைமையில் பீடுநடை போடுகின்றது. -BBC_Tamil

TAGS: