ஜாகிம்மைச் சந்திக்க ஜோகூர் அரண்மனை இன்னும் அனுமதி அளிக்கவில்லை

 

இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் ஜமில் கிர் பாருமை சந்திக்க ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

“நாங்கள் (அரண்மனையின்) அனுமதிக்காக காத்திருப்போம்”, என்று ஜமில் கிர் செய்தியாளர்களிடம் இன்று கோலாலம்பூரில் கூறினார்.

மேலும் விளக்கம் கோரிய போது, மேற்கொண்டு எதுவும் கூற ஜமில் மறுத்ததோடு அருகிலிருந்து மின்தூக்கிக்குள் சென்று விட்டார்.

சமயப் போதகர் ஸமிஹான் மாட் ஸின் நடத்தை சம்பந்தமாக ஜாகிம் மற்றும் ஜமில் கிர் ஆகியோர் ஜோகூர் ஆட்சியாளரரை சந்திக்க அவரின் அனுமதி கோரப்படும் என்று அக்டோபர் 14 இல் ஜாகிம் தலைமை இயக்குனர் ஓத்மான் முஸ்தாபா கூறியிருந்தார்.