ரிம200-ஐ இலஞ்சமாகப் பெற்ற போலீஸ்காரருக்கு 20 மாத சிறை, ரிம20,000 அபராதம்

 

இன்று அலோஸ்டாரில், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் சிறப்பு நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டில் ரிம200 ஐ இலஞ்சமாக பெற்றுக்கொண்ட ஒரு போலீஸ்காரர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அவருக்கு 20 மாத சிறைத்தண்டனையும் ரிம20,000 அபராதமும் விதித்தது.

நீதிபதி ஸானோல் ரஷிட் ஹுஸ்சேன் இத்தண்டனையை 53 வயதான அஸஹார் அப்துல் அசிஸுக்கு விதித்தார். இவர் கூலிம் போலீஸ் தலைமையகத்தில் போதைப் பொருள் பிரிவில் இருந்தார். இவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 10 மாத சிறைத்தண்டனையை அஸஹார் இன்றிலிருந்து தொடங்க வேண்டும் என்றும் ரிம10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும், கட்டத் தவறினால் அதற்கு 100 நாள் சிறைத்தண்டனை என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அஸஹாரின் வழக்குரைஞர் மேல்முறையீடு செய்வது நிலுவையில் இருக்கையில் அவரது சிறைத்தண்டனையைத் தள்ளி வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.